May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் 27 சதம் அதிகரிப்பு

புது தில்லி, ஏப்.26

நாட்டின் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி, கடந்த ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தில், 26.51 சதம் அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தக துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கடந்த ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தில், நாட்டின் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி, ரூ.43,798 கோடி அளவுக்கு நடைபெற்றுள்ளது. இது, 26.51 சத உயர்வாகும். பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், பழங்கள், பானங்கள், பருப்பு வகைகள், நிலக்கடலை, புண்ணாக்கு ஆகியவை அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

மேலும், இவற்றில், மதிப்புக்கூட்டப்பட்ட, பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், மதுபானங்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி, 40 சதம் அளவுக்கு, மதிப்பீட்டு காலத்தில் அதிகரித்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டிலும் தொடர்ந்து வளர்ச்சி காணும் என துறை சார்ந்த வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Spread the love