October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பதிவுத்துறை சார்பில் குறைதீர்க்கும் முகாம் அமைச்சர் பி.மூர்த்தி துவக்கி வைத்தார்

மதுரை, அக்.11

மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு வட்டம், ராஜகம்பீரத்தில் உள்ள பதிவுத்துறை அலுவலகத்தில் பதிவுத்துறை சார்பில் பதிவு குறைதீர்க்கும் முகாமினை, மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், தலைமையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, துவக்கி வைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு தெரிவிக்கையில்:

மதுரை மாவட்டத்தில் திருமோகூர் ஊராட்சிக்கு உட்பட்ட 5 சார்பதிவாளர் அலுவலகத்தின் சார்பில் இந்த முகாமினை துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த சார்பதிவாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட மக்கள் எல்லாம் அவர்களுக்கு தேவையான சிறு, சிறு குறைகளையயல்லாம் மனுவாக வழங்கி இருக்கின்றனர்.

வில்லங்க மனுக்கள், வாரிதாரர் மனுக்கள் மற்றும் உயில் மனுக்கள் அதிகமாக அளவில் வரப்பெற்றுள்ளது. பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற மனுக்கள் மீது ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காணப்படும். இன்றைக்கு பெறக்கூடிய மனுக்களில் வில்லங்கம் சம்பந்தமான மனுக்கள் வரப்பெற்றிருந்தால் அந்த மனுக்களுக்கு இன்றைய தினமே தீர்வு காணப்படும். சிக்கலாக இருக்கின்ற மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொண்டு ஒரு வார காலத்திற்குள் தீர்வு காணப்பட்டு முடிக்கப்படும். பத்திரப்பதிவுத்துறையில், பதிவு செய்த உடனே பட்டா மாறுதலுக்கு தாலுகா அலுவலகத்திற்குதான் செல்ல வேண்டும். தாலுகா வாயிலாக பத்திர அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தால், உடனடியாக மாற்றம் செய்வதற்கு வசதியாக இருக்கும். வடக்கு தாலுகாவில் இருக்கக்கூடிய சொத்துக்கள் 3, 4 சார்பதிவாளர் அலுவலகத்தில் இருக்கும். இதுபோன்று இல்லாமல் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலக கட்டுப்பாட்டிற்கு மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். பத்திரப்பதிவுத்துறையில் தற்பொழுது, போலிப்பதிவுகள் மிக மிக குறைந்துள்ளன. கோவில் நிலங்களையும் அரசுக்கு சொந்தமான நிலங்களையும் மற்றும் மசூதிக்கு சொந்தமான இடங்களையும் இனி பதிவு செய்ய முடியாது என, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

Spread the love