புது தில்லி, மே 7
ஸ்ரீ பத்ரிநாத் தாம் பகுதியை ஆன்மீக ஸ்மார்ட் மலைநகரமாக உருவாக்குவதற்கு, பொதுத்துறை எண்ணெய் மற்றும் வாயு நிறுவனங்களான இந்தியன் ஆயில், பிபிசிஎல், எச்பிசிஎல், ஓஎன்ஜிசி, கெயில் மற்றும் ஸ்ரீ பத்ரிநாத் உத்தன் அறக்கட்டளை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையயழுத்தானது.
இந்த ஒப்பந்தம் உத்தரகாண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் மத்திய, மாநில உயர் அதிகாரிகள் முன்னிலையில் கையயழுத்தானது. இந்த ஒப்பந்தப்படி, ஆற்றங்கரை பணிகள், சாலைகள், பாலங்கள் கட்டுதல், குருகுலக் கட்டிடங்கள், கழிவறைகள் கட்டுதல், குடிநீர் வசதிகள் அமைத்தல், தெருவிளக்குகள் அமைத்தல் உள்பட முதல்கட்ட மேம்பாட்டு பணிகளுக்கு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ரூ.99.60 கோடி வழங்கவுள்ளன.
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், “”ஆன்மீகம், மதம் மற்றும் கலாச்சார காரணங்களுக்காக, கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு சார் தாம் மிகவும் நெருக்கமானவை.
மேம்பாட்டு வசதிகளுக்கு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் முயற்சியை பாராட்டிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், “” பத்ரிநாத் தாம்-ஐ ஆன்மீக ஸ்மார்ட் மலை நகரமாக உருவாக்க பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் முன்வந்துள்ளதை எண்ணி தாம் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.
முக்கியமான தொழில்களில் சுற்றுலாவும் ஒன்று. மாநிலத்தின் வளர்ச்சியில் இது முக்கிய பங்காற்றுகிறது. பத்ரிநாத் போன்ற இடங்களை மேம்படுத்துவது, அதிக சுற்றுலாப் பயணிகளை கவரும். இது மாநிலத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும்” என்றும் அமைச்சர் கூறினார்.