January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பனியால் வாழைத்தார் விலை உயர்வு

திருப்பூர், டிச.23

பனிப்பொழிவு காரணமாக, திருப்பூர் மாவட்டம், பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் வாழைத்தார் வரத்து குறைந்து காணப்பட்டது. வரத்து குறைவால் விலை உயர்ந்து, விற்பனையும் விறு, விறுப்பாக நடந்தது. பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில், வாரந்தோறும் ஞாயிறு மற்றும் புதன்கிழமைகளில், வாழைத்தார் ஏலம் நடைபெறுகிறது.

வெளி மாவட்டங்கள், உடுமலை, பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விற்பனைக்காக, வாழைத்தார்கள் கொண்டு வரப்படுகின்றன. நேற்று முன்தினம் நடந்த ஏலத்துக்கு, வரத்து குறைந்து காணப்பட்டாலும் வியாபாரம் விறுவிறுப்பாக இருந்தது.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், கொரோனா ஊரடங்கு காரணமாக, ஏலம் கோராமல், எடையளவு கணக்கீடு செய்து விற்பனை செய்யும் முறை பின்பற்றப்படுகிறது. பனிப்பொழிவு காரணமாக, சந்தைக்கு வாழைத்தார் வரத்து குறைந்துள்ளது. இதனால், நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் விற்பனைக்கு, 500 வாழைத்தார்கள் வந்தன. ஒரு கிலோ பூவம்பழம் ரூ.22, கற்பூர வள்ளி ரூ.22, செவ்வாழை ரூ.36, மோரிஸ் ரூ.15, நேந்திரன் ரூ.38, கதளி ரூ.26 என விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Spread the love