பப்பாளி நீண்ட குழல் வடிவ காம்புகளில் பெரிய கை வடிவ இலைகளை உச்சியில் மட்டும் கொண்ட மென்மையான பாலுள்ள மரம், பால், காய், பழம் ஆகியவை மருத்துவ பயன் உடையவை. வயிற்றுப்புழு கொள்ளுதல், தாய்பால் பெருக்குதல், மாதவிலக்கைத் தூண்டுதல், நாடி நடையை உயர்த்தி, உடலுக்கு வெப்பம் தருதல் ஆகியவற்றை பொது குணங்கள் உடையது. இலையை வதக்கி ஒத்தடம் கொடுக்க நரம்புத் தளர்ச்சி, நரம்பு வலி ஆகியவை தீரும். சிதைத்து வதக்கிய இலைகளை வீக்கம் கட்டிகளுக்கு வைத்து கட்டலாம். பப்பாளி பாலை விளக்கெண்ணையில் கலந்து கொடுக்க வயிற்றுப் பூச்சிகள் நீங்கும். பாலை மட்டும் தடவி வர வாய், நாக்கு, தொண்டை, ரணம் தீரும். வெங்காரம் கலந்த பப்பாளிப் பாலை தடவ கட்டி வேர்க்குரு தீரும். காயை சமைத்து உண்டு வர தடித்த உடம்பு குறையும். தாய்பால் பெருகும். பாலை படிகாரத்துடன் கலந்து தடவ மண்டை கரப்பான், சொறி தீரும். காய் பழம் ஆகியவை இளம் கருவை கலைக்கும் நாள்தோறும் ஒரு துண்டு பப்பாளிப் பழம் சாப்பிட்டு வர கல்லீரல், மண்ணீரல் வீக்கம் குறையும். சரிபார்த்தல் பெருகும். குன்மம், ரணம் அழற்சி, வயிற்றுப் பூச்சி, மலச்சிக்கல், சிறு நீர் பாதை அழற்சி ஆகியவை தீரும்.
பப்பாளி

Spread the love