October 23, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பயறு வகைப்பயிர்களின் விதைகள் உற்பத்தி பயிற்சி

மதுரை, அக்.8

மதுரை மாவட்டம், கள்ளிக்குடி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் வேளாண்மை உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ், திருமால் கிராமத்தில் உள்ள நூலக கட்டிட வளாகத்தில் 07.10.2021 வியாழக்கிழமை விவசாயிகள் பயிற்சிநடைபெற்றது.

இந்த பயிற்சியில் தரமான பயறு வகைப்பயிர்களின் விதைகள் உற்பத்தி முறை குறித்து விரிவாக விளக்கப்பட்டது. தரமான பயறு உற்பத்திக்கு முதலில் உயிரியல் பூஞ்சாணக் கொல்லியான டி.விரிடி கொண்டு விதை நேர்த்தி செய்தல், ரைசோபியம் மற்றும் பாஸ்போ பாக்ட்ரியா உயிர் உரங்கள் கொண்டு உயிர் உர விதை நேர்த்தி முறைகள் பயிர் எண்ணிக்கை பராமரிப்பு மற்றும் பூக்கும் தருணத்தில் 2% சத டிஏபி கரைசல் தெளிப்பு முறைகள் பின்பற்றும்போது தரமான விதைகள் உற்பத்தி செய்யப்படுவதோடு கூடுதல் மகசூல் கிடைப்பதும் உறுதி செய்யப்படுகிறது. இப்பயிற்சியில் வந்த அனைவரையும் கள்ளிக்குடி வேளாண்மை உதவி இயக்குநர் ச.உலகம்மாள் டீ.ளுஉ (யுபசi) வரவேற்று வேளாண்மைத்துறையின் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்து விளக்கினார். மதுரை வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் ஆரோக்கியமேரி, பயறு வகை பயிர்களின் உற்பத்தி முறைகள் மற்றும் வசம்பு பொடி வசம்பு எண்ணெய் கொண்டு நோய் தடுப்பு மற்றும் நோய் நிர்வாகம் குறித்து விளக்கினார். தேசிய உணவு பாதுகாப்;பு இயக்க ஆலோசகர் கார்த்திக், பயறு வகைப் பயிர்கள் சாகுபடி செய்யும் பயனாளிகளுக்கான தழிழக அரசின் திட்டங்கள் குறித்து விளக்கினார். 2% சத டிஏபி கரைசல் தெளிப்பது குறித்து வேளாண்மை துணை அலுவலர் குமாரிலட்சுமி, விளக்கினார். நிறைவாக விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும், கள்ளிக்குடி உதவி வேளாண்மை அலுவலர் மலர்கொடி, நன்றி கூறினார்.

Spread the love