June 24, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பயறு வகைப் பயிர்களில் ஒருங் கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பயிற்சி

மதுரை, ஜூன் 16

மதுரை மேற்கு வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் 15.6.22 அன்று தேனூர் கிராமத்தில் பயறு வகைப் பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. இரா.வளர்மதி, வேளாண்மை உதவி இயக்குநர், மதுரை மேற்கு பயறு வகைப்பயிர்கள் பயிர் செய்வதன் நன்மைகள் குறித்து விவசாயிகளிடம் எடுத்துரைத்தார். வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் முனைவர் வள்ளல்கண்ணன், கலந்து கொண்டு நெல் தரிசில் பயறு, பருவம் மற்றும் இரகத் தேர்வு, பயிர் செய்யும் முறைகள் மற்றும் பராமரிப்பு குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார். இரா.பாரதி, துணை வேள்ணமை அலுவலர் கலந்து கொண்டு செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மானிய விபரங்கள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கினார். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேனூர் கிராமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை – உழவர் நலத்துறை மற்றும் 18 சகோதரத்துறையினரின் திட்டத்தினை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்காக கிராம விவசாயிகளின் தேவைகள் கேட்டறியப்பட்டது. இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை காதர்உசேன், உதவி வேளாண்மை அலுவலர், ராஜசேகர், வட்டாரத் தொழில் நுட்ப மேலாளர், பாலமுருகன், உதவி தொழில் நுட்ப மேலாளர் ஆகியோர் செய்திருந்தனர்.

Spread the love