May 10, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பயறு வகை பயிர்களில் கடின விதைகளை நீக்கும் தொழில்நுட்பம் வேளாண்மை அறிவியல் நிலையம் ஆலோசனை

விருதுநகர், ஏப்.30

உளுந்து மற்றும் பாசிபயிர் போன்ற பயறுவகை பயிர்களின் விதைகளை விதைத்து அவை முளைக்கும்போது சில விதைகள் கடினமாக இருக்கும். இந்த விதைகளை நீரில் ஊறவைக்கும் போது விதைகள் நீரை உறிஞ்சாமல் கல்போன்று இருப்பதால் இவ்விதைகளை கடின விதைகள் என்கிறோம். விதை உற்பத்தியின் போது தேவையான தண்ணீர் கிடைக்காதது மற்றும் அதிக வெப்பம் போன்ற காரணங்களால் விதைகளின் விதையுறை கடினமாக மாறி கடின விதைகள் உருவாகின்றன. எனவே கடின விதைகளை கண்டறிய விதைகளை நீரில் மூன்று மணி நேரம் ஊறவைத்து பார்த்தால் சில விதைகள் மட்டும் நீரை உறிஞ்சாமல் அப்படியே கல் போன்று இருக்கும். இவ்வாறாக இருக்கும் கடின விதைகள் 10 சதவீதத்திற்கு அதிகமாக இருந்தால் அமிலச் சிகிச்சை செய்ய வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 100 மில்லி அடர் கந்தக அமிலம் கொண்டு 2 முதல் 3 நிமிடம் வைத்து பின்னர் நன்றாக கழுவி விதைக்க பயன்படுத்தினால் விதைகளின் முளைப்பு திறன் அதிகரித்து செடிகள் வயலில் ஒரே சீராக வளரும் என அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலைய தொழில் நுட்ப வல்லுநர்கள் முனைவர் ப.வேணுதேவன், முனைவர் ஜெ. ராம்குமார், முனைவர் ப. அருண்குமார் மற்றும் முனைவர் கோ. ஸ்ரீனிவாசன், திட்ட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தனர்.

Spread the love