June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பயறு வகை பயிர்களில் காய்ப்புழு மற்றும் அசுவினி பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள்

சிவகங்கை மாவட்டம், கல்லல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சு.அழகுராஜா, பயறு வகை பயிர்களில் காய்ப்புழு மற்றும் அசுவினி பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகளை பற்றி பின்வருமாறு எடுத்துரைத்தார்.

காய்ப்புழு தாக்குதல் அறிகுறிகள்
• முட்டையிலிருந்து வெளிவரும் இளம் புழுக்கள் 3-5 நாட்கள் வரை இளம் இலைகளைத் தின்றும்.
• புழுக்கள் வளர்ந்த பின்னர் காய்களில் வட்ட வடிவ துளையிட்டு உடலின் முன்பகுதியை உள்ளே நுழைத்துக் கொண்டு பின் பகுதியை வெளியே வைத்துக்கொண்டு விதைகள் முழுவதையும் தின்றுவிடும்.
• தாக்கப்பட்ட காய்களின் மேல் புழுக்களின் எச்சம் காணப்படும்.

மேலாண்மை முறைகள் :
• கோடை உழவு செய்யவும். நெருக்கமான விதைப்பை தவிர்க்கவும்.
• ஒரு ஏக்கருக்கு 5 இனகவர்ச்சி பொறி வைத்து ஆண் அந்து பூச்சியை கவர்ந்து அழிக்கலாம்.
• ஏக்கருக்கு 10 இடங்களில் பறவை இருக்கைகள் வைக்கவும்.
• ஏக்கருக்கு 100 டுநு என் பிவி நச்சுயிரி (நியூக்ளியர்பாலி ஹெட்ரோஸிஸ் வைரஸ்) தெளிக்கலாம்.
• தாக்குதல் பொருளாதார சேத நிலையை தாண்டும் போது கீழ்கண்ட ஏதேனும் ஒரு பூச்சி மருந்தினை ஏக்கருக்கு தெளிக்கலாம்.
• மானோகுரோட்டபாஸ் 36 ளுடு – 250 மிலி, தயோடிகார்ப் 75மூ று P – 250 கிராம்

அசுவினி பூச்சி தாக்குதல் அறிகுறிகள்

• வளர்ந்த பூச்சிகள் இலையின் அடியில் பூங்கொத்து மற்றும் காய்களில் கூட்டமாக இருந்து கொண்டு சாறை உறிஞ்சும்.
• இதனால் இலையின் அகலம் குறைந்து சுருங்கி தடித்து காணப்படும். செடியின் வளர்ச்சி குன்றிவிடும்.

மேலாண்மை முறைகள் :

அசுவனி தாக்குதல் அதிகமாகும் போது ஏக்கருக்கு டைமெத்தோயேட் 30 நுஊ – 200 மிலி (அ) மிதைல் டெமட்டான் 25மூ நுஊ –200 மிலி தெளித்து கட்டுப்படுத்தலாம் என்பது போன்ற தொழில்நுட்ப கருத்துகளை எடுத்துரைத்தார்.

Spread the love