June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பயறு வகை பயிர்களுக்கு மகசூலை அதிகரிக்கும் இலை வழி ஊட்டம் (டி.ஏ.பி கரைசல்)

சிவகங்கை, ஏப்.20

சிவகங்கை மாவட்டம் கல்லல் வட்டார வேளாண்மைஉதவி இயக்குநர் சு.அழகுராஜா, பயறு வகை பயிர்களில் மகசூலை அதிகரிக்கும் இலை வழி ஊட்டம் பற்றிய தொழில்நுட்ப செய்தியை கூறியதாவது,

இலைவழி ஊட்டச்சத்து அளித்தல் :
பயறு வகை பயிர்களில் இலை வழி ஊட்டம் அளிப்பதற்கு டி.ஏ.பி உரக்கரைசலை பயன்படுத்த வேண்டும். முதலில் ஒரு ஏக்கருக்கு 4 கிலோ டி.ஏ.பி உரத்தை 20 லிட்டர் நீரில் தெளிப்பதற்கு முதல் நாள் மாலை ஊற வைக்க வேண்டும் மறுநாள் ஊறவைத்த கலவையின் தெளிந்த நீரை மட்டும் எடுத்து துணியால் வடிகட்டிய பின்னர் அதனுடன் 180 லிட்டர் நீரை ஊற்றி நன்கு கலக்க வேண்டும். இவ்வாறு தயாரித்த 200 லிட்டர் கரைசலை கைத்தெளிப்பன் கொண்டு மாலை வேளையில் செடிகளின் மீது நன்கு படுமாறு தெளிக்க வேண்டும்.

டி.ஏ.பி கரைசல் தயாரித்து தெளிக்க முடியாத சூழ்நிலையில், ஒரு ஏக்கருக்கு தேவையான 2 கிலோ பயறு ஒண்டர் துகள்களை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து விதைத்த 30ஆம் நாள் மற்றும் 40ஆம் நள் இரு முறை மாலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.

வளர்ச்சி ஊக்கி அளித்தல் :
பூக்கள் உதிர்வதால் காய் பிடிப்பு குறைந்து மகசூல் இழப்பு ஏற்படுகிறது. பூக்கள் உதிர்வதை தடுக்க 50% பூப்பின் போது ஏக்கருக்கு 40 மிலி பிளானோபிக்ஸ் என்ற வளர்ச்சி ஊக்கியை 180 லிட்டர் கலந்து தெளிக்க வேண்டும்.

பயன்கள் :
Ø பயிர் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது
Ø பூக்கள் உதிர்வதை தடுக்கிறது
Ø அதிககாய் பிடிக் கஉதவுகிறது
Ø காய்களின் எடை அதிகரிக்கிறது

Ø இரு மடங்கு மகசூலுக்கு வழிவகுக்கிறது

Spread the love