August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பயிர்களில் பயிர் சுழற்சி முறைகளை பின்பற்றும் முறைகள்

சிவகங்கை, ஜூன் 29

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் வட்டாரத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை – விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் மூலம் வேளண்மை பயிர்கள் மற்றும் தோட்டகலை பயிர்கள் பூச்சிகள் மற்றும் நோய்கள் பற்றியும் கட்டுப்படுத்தும் முறைகள், பயிர் சுழற்சி முறையைக் கடைபிடித்தல் மற்றும் நோய்க்கு எதிர்ப்புத் திறன் உள்ள வகைகளைப் பயிர் செய்தல் பற்றி வேளாண்மை உதவி இயக்குநர் அ.அம்சவேணி கீழ்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

  1. அசுவிணி
    பச்சை அசுவிணி கரும்பு, பூசணி, உருளைக்கிழங்கு தேமல் நோய
    வாழை அசுவிணி வாழை முடிக்கொத்து நோய்
    பருத்தி அசுவிணி பப்பாளி, மிளகாய், பூசணி, தேமல் நோய
    அசுவிண தட்டைப்பயறு அசுவிணி – தேமல்நோய்,
    துவரை மலட்டுத் தேமல் நோய்,
    நிலக்கடலை ரோசட்டி நோய்.
  2. தத்துப்பூச்சிகள்

நெல் பச்சைத்தத்துப் பூச்சி மஞ்சள் குட்டை மற்றும் துங்ரோ நச்சுயிரி நோய்கள்
புகையான் பூச்சி நெல்லில் புல்குட்டை நோய
கத்தரி தத்துப்பூச்சி கத்தரி சிற்றிலை நோய்
எள் தத்துப் பூச்சி எள் பச்சை இலை நோய்

  1. வெள்ளை ஈ
    வெண்டை நரம்பு வெளுத்தல், தக்காளி, புகையிலை, பப்பாளி மற்றும் பருத்தி இலைச் சுருள் நோய், மரவள்ளி மற்றும் பயறு வகைகளில் தேமல் நோய்.
  2. மாவுப்பூச்சி
    கரும்பு மாவுப்பூச்சி கரும்பு ஸ்பைக் நோய்
  3. இலைப்பேன்
    திரிப்ஸ் டபாசி தக்காளி புள்ளிவாடல் நோய்
    ஃப்ரான்கிநெல்லா ஸ்குல்ட்சி நிலக்கடலை மொட்டு சிறுத்தல் நோய்
  4. பயிர் சிலந்தி
    செஞ்சிலந்தி உருளைக்கிழங்கு இலை நரம்பு கருத்தல் நோய
    துவரைசிலந்தி துவரை மலட்டுத் தேமல் நோய்
    கரும்பு சிலந்தி கரும்பு கோடு நோய்

பூச்சிகள் மூலம் நச்சுயிரிகள் பயிர்களில் பரப்பப்பட்டவுடன் அவைகள் இலைகளில் உள்ள பச்சையம் உற்பத்தியைக் குறைக்கிறது. இதனால் இலைகள் பச்சையம் அற்று வெளுத்துக் காணப்படும். மஞ்சள் வண்ணத்திலும், பழுப்பு நிறத்திலும் தேமல் போன்று காணப்படும். சில சமயம் சிவப்பு நிறமாகவும் இலைகள் மாறிவிடும். நரம்புகள் வெளுத்தும், கோடுகள் புள்ளிகளுடனும் காணப்படும். சில இடங்களில் திசுக்கள் இறந்துவிடும். மேலும் இலைகள் சிறுத்தும் உருமாற்றம் பெற்றும் காணப்படும். இலைகள் சுருண்டும், குடை போன்று வளைந்தும் காணப்படும். சில சமயம் பயிரின் வளர்ச்சி பாதித்து குட்டையாகக் காணப்படும். சில சமயம் மலர்கள் மலட்டுத்தன்மையுள்ள மலர்களாக மாறிவிடும்.

கட்டுப்படுத்தும் முறைகள்
· நெல் அறுவடை செய்தபின் எஞ்சிய தாள்களை உழவு செய்வதன் மூலம் மஞ்சள் குட்டை நோய்க்காரணிகளை அழித்து அடுத்த பட்டத்திற்குப் பரவாமல் தடுக்கலாம்.
· நோயுற்ற பயறுவகை செடிகளை ஆரம்ப கட்டத்திலேயே பிடுங்கி அழிக்க வேண்டும்.
· எள் பச்சை சிற்றிலை நோயைக் கட்டுப்படுத்த எள்ளுடன் துவரை பயிரை 6:1 என்ற விகிதத்தில் பயிரிட்டால் இதன் தாக்கத்தைக் குறைக்கலாம்.
· புகையிலையில் தோன்றும் நோயை கட்டுப்படுத்த 10 சத காகிதப்பூ இலை சாற்றை மூன்று முறை ஒரு வார இடை வெளியில் தெளிக்க வேண்டும்.
· மிளகாயில் ஏற்படும் தேமல் நோயை கட்டுப்படுத்த ஒவ்வொரு ஐந்து வரிசைக்கும் இரண்டு வரிசை சோளம் அல்லது மக்காச்சோளப் பயிரை பயிரிட்டு தாக்கத்தைக் குறைக்கலாம்.

பயிர் சுழற்சி முறையைக் கடைபிடித்தல்
· வயலில் ஒரு பயிரை மட்டுமோ அல்லது ஒரே மாதிரியான பயிர்களை மட்டுமோ பல வருடங்களுக்கு தொடர்ந்து பயிர் செய்தால் சில நோய்கள் அதிகமான அளவில் தொடர்ந்து காணப்படும்.
· சிறிது காலத்திற்குப்பின் அந்த வயலில் அப்பயிர்களில் சிலவற்றைத் தொடர்ந்து வளர்ப்பது இயலாது.
· இப்பகுதிகளில் மாற்றுப் பயிர்களை விவசாயம் செய்தால் இந்த நோய்கள் தானாகவே குறைந்துவிடும்.

நோய்க்கு எதிர்ப்புத் திறன் உள்ள வகைகளைப் பயிர் செய்தல்

· நோய் தாக்காத வகைகள் அல்லது நோயைத் தாங்கி வளரக்கூடிய வகைகளைப் பயிர் செய்வதுதான் மிகவும் சிக்கனமான எளிய சிறந்த வழியாகும்.

Spread the love