தென்காசி, மார்ச் 16
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள நார்ணாபுரம் கிராமத்தில் எஸ்.தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி மாணவிகள் ஊரக பணி அனுபவ திட்டத்தின் கீழ் பயிர் சுழற்சி மற்றும் உழவன் செயலி குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். பயிர் சுழற்சி என்பது தொடர்ந்து ஒரே வகையான பயிரினை நிலத்தில் விளைவிப்பதற்கு பதிலாக மாற்றுப் பயிர்களை பயிர் செய்வதாகும். அதிக ஊட்டச்சத்து மிக்க பயிருக்கு பின் குறைந்த ஊட்டச்சத்துமிக்க பயிர்களை பயிரிடலாம். எடுத்துக்காட்டாக, மக்காச்சோளத்துக்கு பின் உளுந்து அல்லது பூசணி வகைகளை பயிரிடுதல், பயிறு வகைகள் பயிரிட்ட பின்பு பயறு அல்லாத வேறு ஏதேனும் பயிர்களைப் பயிர் செய்தல் வேண்டும். சில பயிர்கள் மண்ணில் உள்ள சத்துக்கள் அனைத்தையும் உறிஞ்சி விடுகின்றன. எடுத்துக்காட்டாக, எள் மற்றும் கடலை, மறுதாம்புப் பயிர்களுக்குப்பின் ஆழமான வேர்கள் செல்லக் கூடிய பயிர்களைப் பயிர் செய்யலாம். சுத்தப்படுத்தும் பயிர்களைத் தொடர்ந்து நாற்றங்கால் பயிர்களை நடலாம். இவ்வாறு பயிர் சுழற்சி செய்வதன் மூலம் அதிக மகசூல் பெறுவதுடன் மண்ணின் வளத்தையும் பாதுகாக்கலாம்.