May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பயிர் நடவு முதல் அறுவடை வரையிலான காலநிலை மாற்றத்தின் நிலவரத்தினை கைபேசி வழியே அறியலாம்

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், வேளாண்மை அறிவியல் நிலையம், சந்தியூர், சேலம் மாவட்டம் மாவட்ட வேளாண் வானிலை மையம் இணைந்து, கொரோனா காலகட்டத்தில் சேலம் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் பயிர் நடவு முதல் அறுவடை வரை (பயிர் இரகம், விதை இரகம் தேர்வு முறைகள், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, கால்நடை பராமரிப்பு, தோட்டக்கலை பயன்பெறும் காலநிலை மாற்றத்தின் நிலவரம் ஆகியவற்றை சேலம் மாவட்ட விவசாயிகள் தங்களுடைய தோட்டத்திலிருந்தே சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் விஞ்ஞானிகளின் வேளாண் ஆலோசனைகளை கீழ்கண்ட தொலைத்தொடர்பு வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

வேளாண்மையில் ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து, முனைவர் மா.விஜயகுமார், திட்ட ஒருங்கிணைப்பாளர், 95785 90617 என்ற எண்ணிலும், மண் வள பாதுகாப்பு குறித்து, முனைவர் ம.மலர்க்கொடி, தொழில்நுட்ப வல்லுநர் (மண்ணியல்), 96775 51797, விதை இரகம் தேர்வு மற்றும் விதை தொழில்நுட்பங்கள் குறித்து, முனைவர் ரா.விஜயன், தொழில்நுட்ப வல்லுநர் (விதை நுட்பவியல்) 94430 29002, பயிரில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து, முனைவர் செ.சுகன்யா கண்ணா, தொழில்நுட்ப வல்லுநர் (பயிர் பாதுகாப்பு) 95977 08765, கால்நடை மற்றும் நோய் பராமரிப்பு தொழில்நுட்பங்கள் குறித்து, முனைவர் பெ.கோகிலா, தொழில்நுட்ப வல்லுநர் (கால்நடை அறிவியல்) 99401 78451, தோட்டக்கலை (காய்கறி மற்றும் பழப்பயிர்கள்) குறித்து, முனைவர் கோ.மாலதி, தொழில்நுட்ப வல்லுநர் (தோட்டக்கலை) 97877 13448, தற்போதைய வானிலை நிலவரம் குறித்து, செ.பிரபாகரன், வானிலை பதிவாளர், 90955 13102 என்ற எண்களிலும் அறிந்து கொள்ளலாம்.

Spread the love