September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் நீர் விளையாட்டு வளாகத்தை அமைச்சர் திறந்து வைத்தார்

கடலூர், செப்.13

கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டைபேரூராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம், தலைமையில் நீர் விளையாட்டு வளாகத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

கடலூர் மாவட்டம், அண்ணாமலை பல்கலைகழகமும், பரங்கிப்பேட்டை பேரூராட்சியும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து பொது மக்கள் பயன்படும் வகையில் நீர் விளையாட்டுவளாகத்தை வெள்ளாற்றங்கரையில் உள்ள கடல்வாழ் உயராய்வு மையத்தின் முன்பகுதியில் அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் பரங்கிப்பேட்டை பேரூராட்சியின் பொது நிதியின் மூலம் 58.80 லட்சம் மதிப்பீட்டில் நீர் விளையாட்டு உபகரணங்களான கயாக்ஸ், கேனோஸ், துடுப்பு படகு, உயிர் காக்கும் படகுகள் மற்றும் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளுடன் பொது மக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள நீர் விளையாட்டுவளாகத்தை வேளாண்மை மற்றும் உழவர்நலன் துறை அமைச்சர் திறந்து வைத்து படகு சவாரியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.சக்திகணேசன், கூடுதல்ஆட்சியர் (வளர்ச்சி)/திட்டஇயக்குநர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர், சார் ஆட்சியர் (சிதம்பரம்) மதுபாலன், டாக்டர்.ஆர்.ஞானதேவன், பதிவாளர், அண்ணாமலை பல்கலைகழகம்.பேராசியர் பாலாஜி சுவாமி நாதன் அண்ணாமலை பல்கலைகழகம். மு.ஆறுமுகம் பி.ஏ,பி.எல்., செயல்அலுவலர் பரங்கிப்பேட்டை பேரூராட்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Spread the love