திருச்சி, ஏப்.2
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டத்திலுள்ள M.R.பாளையம் கிராமத்தில், மண்ணச்சநல்லூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் மற்றும் பூச்சியல் துறை ஆய்வாளர்கள் தலைமையில் நடைபெற்ற செயல்விளக்க பயிற்சியில், நாளந்தா வேளாண்மை கல்லூரி மாணவிகள் (குழு எண் – 1, அபிதா, அகல்யா, பாலப்பிரியா, தேவி கீத்திகா, கவினா, மகாலெட்சுமி, நிஷா, பிரியா, சத்திய பிரிய தர்ஷினி) பங்கேற்றனர்.
மேலும் அப்பகுதியில் ஏற்படும் நீர்ப் பற்றாக்குறையை குறைக்கும் விதமாக நுண்ணீர் பாசனமான, சொட்டு நீர்ப்பாசனத்தின் தேவையையும், அதன் பயன்களையும் எடுத்துரைத்து, அதற்காக தமிழ்நாடு அரசு வழங்கும் மானியம் பற்றியும் விளக்கினர்.
Spread the love