October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பருத்தியில் கூண் வண்டு தாக்குதலில் இருந்து காக்க ஆலோசனை

விருதுநகர், அக்.13

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டாரத்தில் தற்போது 300 ஹெக்டேர் வரை பருத்தி 15 முதல் 20 நாட்கள் பயிராக உள்ளது. இந்நிலையி்ல் உள்ள பருத்தியில் தண்டு கூண் வண்டு தாக்குதலில் இருந்து பயிரை பாதுகாக்க விவசாயிகள் பின்வரும் தடுப்பு முறைகளை பின்பற்ற வேண்டும் என இராஜபாளையம் வேளாண்மை உதவி இயக்குநர் தி.சுப்பையா, தெரிவித்துள்ளார்.
இதில் தண்டு கூண் வண்டு
சேதத்தின் அறிகுறிகள்
தரை மட்டத்திற்கு சற்று மேலே தண்டு மீது வீக்கம் காணப்படும்.

இளம் தாவரங்கள் வாடி இருக்கும், முதிர்ந்த செடிகள் வீரியம் மற்றும் வலிமை குறைந்து பலத்த காற்று காரணமாக செடி உடைந்து விடும். இதனை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீரில் குளோர்பைரிபாஸ் 2 மில்லி மற்றும் கார்பன்டாசியம் 1 கிராம் வீதம் கலந்து விதைத்த 15 மற்றம் 30 நாளில் செடியை சுற்றி ஊற்ற வேண்டும் அல்லது கார்போபுரான் குருணை மருந்தை இடலாம் எனவும், மேலும் 40 முதல் 45 நாளில் கண்டிப்பாக செடியை சுற்றி மண் அணைக்க வேண்டும் என தெரிவித்தார்.

Spread the love