August 15, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பருத்தியில் தண்டு கூன்வண்டினைக் கட்டுப்படுத்தும் முறைகள்

இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக திருப்புல்லானி, ஆர்.எஸ்.மங்களம், நைனார் கோவில், பரமக்குடி, சத்திரக்குடி, முதுகுளத்தூர், கடலாடி வட்டாரப் பகுதிகளில் பருத்தியானது சுமார் 8000 எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. நைனார்கோவில் வட்டாரப் பகுதிக்குட்பட்ட மும்முடிச்சாத்தான் கிராமத்தில் இராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் தி.ராகவன், முனைவர் கு.இளஞ்செழியன், தொழில் நுட்ப வல்லுநர் (பயிர்ப் பாதுகாப்பு), பருத்தி பயிரில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் பற்றிய வயல்வெளி ஆய்வு நடத்தினார். வயல்வெளி ஆய்வின் போது பருத்தியில் ஆங்காங்கே தண்டு கூன்வண்டின் தாக்குதலானது பரவலாக தென்படுவது கண்டறியப்பட்டது.

சாதகமான சூழ்நிலை
எ குறையும் பகல் நேர வெப்பநிலை
எ அதிகரிக்கும் இரவு நேர வெப்பநிலை மற்றும் ஈரப்பதம்

சேத அறிகுறிகள்
§ தண்டு கூன்வண்டின் தாக்குதலானது விதை முளைத்த 12 முதல் 15 நாட்களிலேயே தோன்றி விடுகிறது.
§ புழுக்களானது தண்டினை வட்ட வடிவத்தில் துளைத்து உள்ளே உள்ள மெல்லிய திசுக்களை உண்பதினால் தண்டுகளில் வீக்கம் ஏற்படுகிறது.
§ ஒரே சேடியில் பல இடங்களில் வீக்கம் காணப்படும்.
§ இலேசான காற்று அடித்தால் கூட செடிகள் ஒடிந்து பின்னர் காய்ந்து விடும்.
§ தண்டு கூன்வண்டின் தாக்குதல் அதிகமாகும் போது சுமார் 60 சதவீத செடிகள் காய்ந்து விடுகின்றன.
§ இதனால் செடிகளின் எண்ணிக்கையானது குறைந்து மகசூல் இடிப்பு ஏற்படுகிறது.
§ மேலும், தாக்கப்பட்ட செடிகளில் காய்களில் எண்ணிக்கை மற்றும் தரம் குறைகிறது.

போருளாதார சேத நிலை : 10 சதவீத பாதிப்பு

மேலாண்மை முறைகள்

§ வயலில் தொடர்ச்சியாக பருத்தி பயிரிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
§ வண்டின் தாக்குதலால் காய்ந்து போன செடிகளை வேருடன் பிடுங்கி அழிக்க வேண்டும். தாக்குதலுக்கு உள்ளான செடிகளை அறுவடைக்குப் பின் எரித்து விட வேண்டும்.
§ அடுத்த பருவத்தில் பருத்தி பயிரிடும் பொழுது ஒரு எக்டேருக்கு அடியுரமாக தொழு உரம் 25 டன் மற்றும் வேப்பம் ழுண்ணாக்கு 250 கிலோ இட வேண்டும்.
§ ஒரு எக்டேருக்கு குளோரிபைரிபாஸ் 50 இசி மருந்தினை 1200 மில்லி என்ற அளவில் 500 லிட்டர் தண்ணீரில் கலந்து விதைத்த 15 மற்றும் 30-வது நாட்களில் தண்டு பாகம் நன்கு நனையும் படி ஊற்றி, பின்னர் மண் அணைக்க வேண்டும்.

மேலும், விபரங்களுக்கு முனைவர் கு.இளஞ்செழியன், தொழில் நுட்ப வல்லுநர் (பயிர்ப் பாதுகாப்பு) மற்றும் முனைவர் தி.ராகவன், திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், இராமநாதபுரம் ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

Spread the love