October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பருத்தி பயிரில் ஒருங்கிணைந்த பயிர்பாதுப்பு நடவடிக்கை குறித்து தகவல்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டாரம், மல்லாங்கிணர் பிர்கா உட்பட்ட பகுதியில் ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பாக 8.10.21யன்று மானாவாரி பருத்தி சாகுபடி நிலங்களில் கள ஆய்வு ஒருங்கிணைப்பாளார் ஸ்ரீகிருபா மற்றும் வேளாண் வல்லுநர் சந்திர சேகரன் களப்பணியாளர்கள், வேம்புலு மற்றும முன்னோடி விவசாயகள் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கூறுகையில் பருத்தி பயிரில் பல வகையான பூச்சிகளும் நோய்களும் விதைத்து முதல்அறுவடை வரை தாக்கி அழித்து வருகின்றன. பூச்சிக்கொல்லி மருந்துகள் அடிப்பதால் பூச்சிகளுக்கு எற்படும் எதிர்ப்பு சக்தி, சுற்றுச்சூழல் மாசுபடுதல் மற்றும் தீமை தரும் பூச்சிகளை தாக்கும் நன்மை தரும் பூச்சிகள் அழிக்கப்படுதல் போன்றவற்றில் இருந்து காத்து இயற்கையோடு இனணந்து ஒருங்கிணைந்த பயிர்பாதுபபு நிர்வாக முறையான தீமை மற்றும் நன்மை தரும் பூச்சிகளை கண்கானித்து சிறந்த உழவியல் உயிரியல் மற்றும் கைவினை முறையை கடைபிடித்து அதிக மகசூல் எடுப்பதற்கான வழி முறைகள் குறித்து விளக்கப்பட்டது.

தற்போது சாறு உறிஞ்சும் பூச்சிக்கள் தாக்குதல் ஒரு சில இடங்களில் காணப்படுகின்றன. அவற்றுக்கான தடுப்பு நடவடிக்கை குறித்து கூறப்பட்டது. காய்புழு தாக்குதலை கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறி ஏக்கருக்கு 5எண்ணம் வைக்க ஆலோசனை வழங்கப்பட்டது. நாகையா நன்றி கூறினார்.

தகவல் : அக்ரி சு.சந்திர சேகரன், வேளாண் ஆலோசகர், அருப்பு கோட்டை. 94435 70289.

Spread the love