நாமக்கல், டிச.22
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த கவுண்டம்பாளையத்தில் ஆர்.சி.எம்.எஸ். சார்பில் திங்கட்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நடந்த பருத்தி ஏலத்தில் உயர் ரக பருத்தி, 100 கிலோ மூட்டை அதிகபட்சமாக, ரூ.9,606க்கும், குறைந்த பட்சமாக, ரூ.7,539க்கும் விற்பனையானது. அதேபோல், மிக உயர் ரக பருத்தி அதிகபட்சமாக, ரூ.13,791க்கும், குறைந்தபட்சமாக, ரூ.8,444க்கும் விற்பனையானது. நேற்று முன்தினம் ஒரே நாளில், 5,088 மூட்டை பருத்தி, ஒரு கோடியே, 40 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.
Spread the love