June 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பருத்தி ரூ.25 லட்சத்திற்கு ஏலம்

நாமக்கல், மே 5

நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர்கள் சங்கத்தில், ரூ.25 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடந்தது.

நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் செயல்படும் நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் செவ்வாய்க்கிழமைதோறும் பருத்தி ஏலம் நடக்கும். அதன்படி நடந்த ஏலத்திற்கு நாமக்கல், கரூர், திருச்சி மற்றும் சேலம் மாவட்டப் பகுதிகளில் இருந்து விவசாயிகள், 1,500 பருத்தி மூட்டைகள் கொண்டு வந்தனர். அதில், ஆர்.சி.ஹெச் ரகம் குவிண்டால், ரூ.5,720 முதல் ரூ.6,720 வரை, டி.சி.ஹெச்., ரகம், ரூ.5,840 முதல் ரூ.8,010 வரை ஏலம் போனது. மொத்தமாக ரூ.25 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்தது.

Spread the love