January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பருப்பு விளைச்சலை ஊக்குவிக்க விதை இலவசம்

திருப்பூர், மே 12

பருப்பு விளைச்சலை ஊக்குவிக்க, பருப்பு விதைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.

காரீப் பருவத்துக்காக, விவசாயிகளுக்கு பருப்பு விதைகள் அடங்கிய, 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பைகள், இலவசமாக வழங்கப்பட உள்ளன. இவற்றின் மதிப்பு, ரூ.82 கோடி. பருப்பு வகை உற்பத்தியை அதிகரிக்க செய்வதற்காக, இதற்கான செலவை மத்திய அரசே ஏற்கிறது. மத்திய, மாநில அரசுகளின் விற்பனை மையம் மூலம் இவை வினியோகிக்கப்படும். பருப்பு விதைகள், ஜூன் 15க்குள் மாவட்டங்களுக்கு அனுப்பப்படும். விதைகளை ஊடு மற்றும் தனிப்பயிராக, 4.05 லட்சம் ஹெக்டேரில் பயிரிடலாம்.

இது குறித்து வேளாண் துறையினர் கூறுகையில், பருப்பு விளைச்சலில் நாடு தன்னிறைவுடன் திகழ்வதற்கும், பற்றாக்குறை நேர்வதையும், இறக்குமதி செய்வதை தவிர்க்கவும் பருப்பு மகசூலில், மத்திய அரசு கவனம் செலுத்துகிறது என்றனர்.

Spread the love