August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பருவ நிலை மாற்றத்தில் பயறு வகைப் பயிர்களின் முக்கியத்துவம்

உலக மக்கள் தொகை 2050ஆம் ஆண்டில் 9.6 மில்லியன் ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பருவகால மாறுபாட்டினால் உலக உணவு உற்பத்தி பாதிக்கப்படும். பயறுவகைக் குடும்பத்தில் 800 பேரினம் மற்றும் 20000 சிற்றினம் உள்ளது. இவை பூக்கும் தாவரங்களில் மூன்றாவது பெரிய குடும்பமாகும். இதில் சில வகைகள் களைகளாகவும் மற்றவை முக்கிய தானிய வகையாகவும் உள்ளன. பயறுவகைப் பயிர்கள் நீடித்த வேளாண்மையில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலுல் பசுமை இல்ல வாயுக்கள் வெளியேறுவதை குறைக்கிறது. மற்ற பயிர்களுடன் ஒப்பிடும் போது பயறு வகைப்பயிர்கள் 5-7 மடங்கு குறைவாக பசுமை இல்ல வாயுக்களை வெளியிடுகிறது. பயறுவகைப் பயிர்கள் வளிமண்டல நைட்ராஜனை மண்ணில் நிலைநிறுத்துவதுடன் மண்ணிற்கு தரமான கழிவுகளை கொடுத்து மண்ணில் சத்துக்கள் சுழற்சிக்கும் நீர் பிடிப்புத்தன்மைக்கும் உதவுகின்றன. பயறுவகைகளில் தாவர புரதச் சத்து உள்ளதால் மனிதனின் ஆரோக்கியந்தில் முக்கிய பங்கு வகுக்கிறது. தழைச்சத்தை நிலை நிறுத்துவதால் குறைந்த இடுபொருள் கொண்டு உற்பத்தி செய்யும் பகுதிகளில் பயன்படுகிறது.

வளிமண்டல மற்றும் மண் தரத்தில் தானிய பயறு வகையின் தாக்கம்

பயறு வகைகள் பசுமை இல்ல வாயுக்களான கார்பன்டைஆகளைடு, நைட்ரஸ் ஆக்ஸைடு அளவைக் குறைக்கிறது. கார்பனை மண்ணில் பிரித்து வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பெட்ரோலிய பொருட்கள் பயன்பாட்டை குறைக்கிறது.

பசுமை இல்ல வாயு வெளியேற்றம்

பயிர் சுழற்சியில் பயறு வகைப் பயிர்களைப் பயன்படுத்தும் போது உரப் பயன்பாடு குறைவதோடு சக்தி பயன்பாடு குறைவதால் பசுமை இல்ல வாயு வெளியேற்றம் குறைகிறது. பயறுவகைப் பயிர்களை பயிர் சுழற்சியில் பயன்படுத்தும் போது எக்டருக்கு 87 கிலோ தழைச்சத்து சேமிக்கப்படுகிறது. நைட்ரஸ் ஆக்ஸைடு வளிமண்டலத்தில் உள்ள பசுமை இல்ல வாயுக்களில் 5-6 சதம் உள்ளது. இவை கார்பன் டை ஆக்ஸைடை விட செயல்திறன் மிக்கது. தழைச்சத்து உரங்கள் பயன்பாட்டில் N2O வெளியிடப்படுகிறது. ஒவ்வொரு 100 கிலோ தழைச்சத்து இடும் போது 1 கிலோ நைட்ரஜன், நைட்ரஸ் ஆக்ஸைடாக ஒரு எக்டரில் வெளியிடப்படுகிறது.

மண் தன்மை

மற்ற பயிர்களைப் பயிரிடுவதால் மண் கரிம அளவு குறைகிறது. பயறுவகை சார்ந்த பயிர்த்திட்டம் மண் வளம், மண்ணின் கரிம அளவு மற்றும் மட்கு அளவு தழைச்சத்து மற்றும் மணிசத்து அளவை மேம்படுத்துகின்றன. மண்கரிம அளவைப் பொறுத்தவரை. பயறு வகைகள் கழிவுகள், கரிம கார்பன் மற்றும் நைட்ரஜன் அளவை அதிகரிப்பதால் பயிரின் வேர்பகுதியில் பேக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. பயறு வகை நைட்ரஜனில் 7-11 சதம் வேர் மற்றும் வேர் முடிச்சுகளில் உள்ளது. தட்டைப்பயறு மற்றும் மக்காச்சோளம் ஊடுபயிராக சாகுபடி செய்வதில் மணிச்சத்து அளவு அதிகரிக்கிறது.

பயிர்த்திட்டத்தில் பயறுவகைப் பயிர்களின் பங்கு

பயறுவகைப் பயிர்கள் தொடர்ந்து வரும் பயிர்களுக்கு நன்மை தருவதால் ஊடுப்பிராக சாகுபடி செய்யப்படுகிறது. தானிய வகைகளுடன் பயறு வகைப் பயிர்களை பயிரிடுவதால் 17-21 சதம் அதிக விளைச்சல் தனிப்பயிர் சாகுபடி செய்வதை விட கிடைக்கிறது. நிலக்கடலை பயிரிடுவதால் எக்டருக்கு 76-188 கிலோ தழைச்சத்து நிலைநிறுத்தப்படுகிறது. மண்ணின் உப்புத்தன்மை மற்றும் களர் தன்மை ஆகியவை தழைச்சத்து நிலைநிறுத்தப்படுவதை பாதிக்கிறது.

பயறுவகைப் பயிர்கள் வளிமண்டல தழைச்சத்தை நிலைநிறுத்தும் போது ஹைட்ரஜன் வாயுவை வெளியிடுகின்றன. இவை மண்ணில் உள்ள பாக்டீரியாக்களுக்கு வளர் உதவியாக உள்ளது. கொண்டைக் கடலை மற்றும் துவரை கிட்டாநிலையில் உள்ள மணிச்சத்தை கரிம அமிலங்களான சிட்ரேட், மாலேட் போன்றவற்றை வேரில் சுரந்து பயிருக்கு கிட்டும் நிலையை அடையச் செய்கின்றன.

பயறுவகைப்பயிர்களை ஊடுபயிராக பயிரிடுதல்

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பயிர்களை ஒரே பரப்பில் ஒர நேரத்தில் பயிரிடுவதாகும். இவை குறைந்த இடுபொருள் மற்றும் குறைந்த விளைச்சல் சாகுபடி முறைகளாக வளர்ந்த நாடுகளில் பின்பற்றப்பட்டு வருகிறது.

நன்மைகள்

பூச்சி கட்டுப்பாடு, அதிக விளைச்சல் குறைந்த இடுபொருள், மாசுபாடு குறைப்பு, தீவன உற்பத்தி, மழை நீர் மற்றும் மண் வளத்தை சரியாக பயன்படுத்த முடுயும்.

பயறுவகை மற்றும் பாதுகாப்பு விவசாயம்

பயறுவகைகள் நீடித்த வேளாண்மையில் முக்கிய பங்கு வக்கின்றன. பாதுகாப்பு விவசாயம் என்பது குறைந்த அளவு மண்ணை கிளறுதல் மற்றும் நிரந்தர மண் மூடுதல் மற்றும் சுழற்சி முறை விவசாயம் ஆகும். சிலவகை பயறுவகைகள் ஆணிவேர்த் தொகுப்பு கொண்டுள்ளதால் வேர் சுரப்புகளின் மூலம் சத்துகளை கரைத்து உறிஞ்சப்படுவதுடன் மண்னில் நீர் ஆழமாக ஊடுருவிச் செல்ல உதவுகின்றன.

எண்ணெய்வித்து சார்ந்த ஊடுபயிர்

எண்ணெய்வித்து சார்ந்த ஊடுபயிரி சாகுபடி செய்வதன் மூலம் மண்வளம் பேணப்படுவதோடு களைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஊடுபயிர் சாகுபடி மூலம் உபரி வருமானம் கிடைக்கிறது.

தகவல் : முனைவர் த.செந்தில்குமார், கோ.நெல்சன் நவமணிராஜ், பூ பாலமுரளி மற்றும் முனைவர் வீ.மு.இந்துமதி, வேளாண்மை அறிவியல் நிலையம், வம்பன், புதுக்கோட்டை 622 303.

Spread the love