June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பலாவா? பலே! பலே! கண்டால் விடாதீங்க!

முக்கனிகளில் ஒன்றான பலா மூர்த்தி பெரிதானாலும், கீர்த்தியும் பெரிது தான். மா, பலா, வாழை இம்மூன்றிலும் ஒவ்வொரு நன்மை இருந்தாலும், பலாவின் பலன்கள் பலப் பலா. எந்த இடத்திலும் வளர்த்திட உகந்தது செம்மண், களிமண் என்றில்லாமல் எங்கும் பயிரிடலாம். இறவை மானாவாரி என்றில்லாமல் மலைச்சரிவு எஸ்டேட் சமவெளி பகுதிகளில் வளர வாய்ப்புள்ள இம்மரம் சாலையின் இரு மருங்கிலும் கூட வளர்க்க ஏற்றது. மேலும், பலா கடும் வறட்சியைத் தாங்கி வளர்ந்தும் கூட தனது இலைகளை பசுமை நிறம் மாறாமல் பேணுவது விந்தையிலும் விந்தை தான்.

சூரிய ஒளி அதிகம் அறுவடை செய்ய உதவும் பலா பால் நிறைந்த மரமாகும். மேலும், பலா மரத்தின் இலைகளில் உணவு உண்டால் குன்மம் எனும் வயிற்றுவலி வராது. எனவே, இந்த இலைகளை எளிதில் இணைத்து தென்னை, தட்டு, தயாராகிறது.

நார்ச்சத்து உடைய நற்கனியான பலாவை எல்லா வயதினரும் சாப்பிடலாம். ஆண்டு முழுவதும் கிடைக்கும் வாழைப்பழத்தை விட ருசி மிகுந்த பலாவை ஏப்ரல், மே மாதங்களில் கிடைக்கும் போது விடக்கூடாது. வைட்டமின் ஏ சத்துடைய பலா உடலுக்கு குளிர்ச்சி தரும் உடல் வறட்சி, எரிச்சல் தளைப்பு போக்கி ரத்தத்தை சுத்திகரிக்கும் பல இதயத்திற்கு வலு சேர்க்கும் என்பது ரத்தக்குழாயில் இருக்கும் கொழுப்புகளை நீக்கி இரத்த ஓட்டத்தை சீராக வைப்பதால் இதய தாக்குதல் வராது. செரிமான உதவி செய்யும் பலாப்பழத்தை தினசரி இரண்டு முதல் ஐந்து வரை உண்ணலாம். மிக அதிகம் உண்டால் ஏற்படும் வயிற்றுக் கோளாறுக்கு பலாக்கொட்டையை வறுத்துப்பொடி செய்து அதனுடன் உப்பு ஓமம் சேர்த்து வெந்நீரில் கலக்கி சாப்பிட வேண்டும்.

கட்டிகளின் மீது பலா இலைகளை அரைத்து தடவினால் அவை உடைந்து குணமாகும். பலா இலைக் கொழுந்தை அரைத்து சிரங்குகளுக்கும் பூசலாம். பலாமரத்துப்பாலை கட்டிகளின் மீது தடவினால் வீக்கம் குறையும். பலா மரத்தின் வேரை பாலில் இட்டு அரைத்து சொறி சிரங்குகளுக்கு பூசலாம்.

பலாவில் பண்ரூட்டி பல, சிங்கப்பூர் பலா எனவும் வகைகள் உள்ளன. கடலூரில் உள்ள பாலூர் ஆராய்ச்சி மையத்தின் மூலம் வெளியிடப்பட்ட பலா இரகங்களில் அதிக திறன் கொண்டு இருமுறை காய்ப்பது கண்டறியப்பட்டது.

பலாப்பிஞ்சை காய்கறியாக சமைத்தும் உண்ணலாம். பலாவில் பி.எல்.ஆர்.5 ரகத்தில் வருடத்துக்கு ஒரு மரத்திலிருந்து 80 காய்கள் (900 கிலோ) கிடைக்கும். ஒரு பழம் 12 கிலோ எடையுடன் 115-120 சுளைகள் கொண்டது. மஞ்சள் வண்ணம் கொண்ட சுளைகள் உடையது. ஏப்ரல், ஜுன் நடுத்தர உயரம் கொண்ட இந்த ரகம் பண்ருட்டியில் பேச்சிப்பாறைக்கு அருகில் ஒட்டு முறையில் உள்ள ரகம் மரத்துக்கு 103 பழங்கள் தரும். அதன் எடை 8/8 கிலோ உள்ளது. இரு முறை காய்க்கும் வணிக ரீதியாக பலா வளர்ப்பது இலாபகரமானதாகும்.

மேலும் விவரம் பெற 98420 07125 உள்ளது.

டாக்டர்.பா.இளங்கோவன், வேளாண்மை இணை இயக்குநர், காஞ்சிபுரம்.

Spread the love