June 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பல்சர் பைக்கில் புதிய டேக்கர் எட்ஜ் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

மும்பை, ஏப்.28

பஜாஜ் நிறுவனம் பல்சர் பைக்கில் புதிய டேக்கர் எட்ஜ் பதிப்பை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. இது விரிவான தகவலாவது: கடந்த 2020 ஏப்ரல் மாதத்தில் நிறுவனம் பல்சர் என்எஸ் 125 எனும் மாடலை களமிறக்கி இந்தியர்களை கவர்ந்தது. இந்த நிலையில், இதே பல்சர் வரிசையில் சிறப்பு பதிப்பு ஒன்றை இந்தியாவில் பஜாஜ் அறிமுகப்படுத்தியுள்ளது.

டேக்கர் எட்ஜ் எனும் சிறப்பு பதிப்பை மோட்டார்சைக்கிளையே நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பதிப்பு பல்சர் 150, பல்சர் 180 மற்றும் பல்சர் 220எஃப் ஆகிய மூன்று மாடல்களிலும் கிடைக்கும். வழக்கமான பஜாஜ் பல்சர் பைக்குகள் இருக்கும் நிறத்தைக் காட்டிலும் மாறுபட்ட நிறம், ஸ்டிக்கர் மற்றும் கிராஃபிக்குகளைக் கொண்டே இந்த டேக்கர் எட்ஜ் பதிப்பு பல்சர் ஆகும். ஆகையால், இந்த சிறப்பு பதிப்பு பைக்குகளில் எந்த எஞ்ஜின் திறன் மாற்றமும் இருக்காது.

பஜாஜ் பல்சர் 150 டேக்கர் பதிப்பு மோட்டார்சைக்கிள் இரு விதமான நிற தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும். முத்து வெள்ளை மற்றும் குங்குமப்பூ நீலம் ஆகிய இரு நிற தேர்வை பல்சர் 150 டேக்கர் பதிப்பு கொண்டிருக்கின்றது. 149.5 சிசி திறன் கொண்ட எஞ்ஜினே இப்பைக்கில் இடம் பெற்றிருக்கின்றது. இது அதிகபட்சமாக 13.8 பிஎச்பி மற்றும் 13.5 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

பஜாஜ் பல்சர் 220 எஃப் டேக்கர் பதிப்பு பைக் நான்கு விதமான வண்ணத்தில் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது தெரிய வந்துள்ளது. இப்பைக்கில் 220 சிசி திறன் கொண்ட எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 20.1 பிஎச்பி மற்றும் 18.55 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் விலையாவது: பல்சர் 150 : ரூ. 1,01,818, பல்சர் 150 ட்வின் டிஸ்க் : ரூ. 1,04,819, பல்சர் 180 : ரூ. 1,09,651, பல்சர் 220எஃப் : ரூ. 1,28,250.

Spread the love