August 13, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பல்சர் 250எஃப் பைக் சோதனை செய்கிறது பஜாஜ்

பல்சர் 220எஃப் பைக்கிற்கு இந்தியச் சந்தையில் வரவேற்பு உள்ள நிலையில் பல்சர் 250எஃப் பைக்கிற்கான சோதனை ஓட்டங்களில் பஜாஜ் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தப் பைக்கின் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்ட ஸ்பை படங்களும் இணையத்தில் கசிந்துள்ளது.

அதிக திறன் கொண்ட பல்சர் பைக்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணிகளை பஜாஜ் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் 250சிசி நேக்கட் ரக பைக்குகளின் தயாரிப்பு குறித்த தகவல் வெளியான நிலையில், தற்போது முதன்முறையாக புதிய வெர்சன் பைக் சோதனை ஓட்டத்தின்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த 250சிசி ரக பைக்குகள் பல்சர் 250 மற்றும் பல்சர் 250எஃப் என அழைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கசிந்துள்ள படங்களின் படி பைக்குகள் முழுமையாக மறைக்ககப்பட்டு சோதனை செய்யப்படுகிறது.

முன்பக்கத்தில் ஹெட்லைட்டையும், பெட்ரோல் டேங்கையும் இணைப்பது போல் பேனல்கள் உள்ளன. ஆனால் ஹெட்லைட்டை சுற்றிலும் அதிகளவில் பேனல்கள் இல்லை. முன்பக்க டூமில் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன.

டெயில்லைட்டின் டிசைனில் மாறுபாடு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலில் அலாய் சக்கரங்கள், டிஸ்க் ப்ரேக்குகள், அளவில் சிறியதான எக்ஸாஸ்ட் குழாய் வழங்கப்படவுள்ளன.

இந்தப் பைக்கில் இடம்பெற உள்ள 250சிசி என்ஜின் அதிகபட்சமாக 24 பிஎச்பி வரை பவரை வெளிப்படுத்தும் என்றும், அத்துடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love