தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தி
கொரோனா தொற்று பாதிப்புக்குச் சிகிச்சை பெற்று வந்த சென்னை பல்லாவரம் காவல் உதவி ஆணையர் ஈஸ்வரன் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். பெருந்தொற்றுக் காலத்திலும் தன் கடமையைச் சிறப்பாக ஆற்றி வந்த ஈஸ்வரன் அவர்களின் மறைவு, தமிழ்நாடு காவல்துறைக்குப் பேரிழப்பாகும். ஈஸ்வரனின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காவல்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். முன்கள வீரர்களாக நின்று கடமையாற்றுவோர் அனைவரும் முன்னெச்சரிக்கையோடும், உரிய பாதுகாப்புடனும் தங்களது பணியை மேற்கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
Spread the love