May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பளபள பச்சை நிறத்தில் வருகிறது டாமினார் 250

பளபளக்கும் பச்சை நிறத்தில் டாமினார் 250 பைக்குகளை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது பஜாஜ் நிறுவனம்.

முன்னதாக டாமினர் 400 பைக்குகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்த இந்த நிறம் டாமினார் 250 பைக்குகளுக்கும் தரப்பட்டுள்ளது. அத்துடன் பளபள கருப்பு நிறத்திலும் டாமினார் 250 பைக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன.

பஜாஜ் டோமினார் 250 பைக் தற்போது சிவப்பு மற்றும் சாம்பல் நிறங்களில் மட்டுமே தற்போது விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த நிலையில் வாடிக்கயைாளர்களைக் கவரும் வகையில் பச்சை மற்றும் கருப்பு நிறங்களும் தரப்பட்டுள்ளன.

புதிய நிறங்களுடன் கூடிய டாமினார் 250 பைக்குகளின் படங்கள் இணையத்தில் வைரல் ஆகத் தொடங்கியுள்ளது.

பைக்குகளின் பின்பக்கத்தில் ‘250′ என்ற முத்திரை காணப்படுகிறது. இந்தியாவில் 250சிசி பஜாஜ் டாமினார் பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.70 லட்சமாகவும், டோமினார் 400 பைக்கின் விலை ரூ.2 லட்சமாகவும் உள்ளது.

பஜாஜ் டோமினார் 250 பைக்கில் 248.8சிசி ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன், லிக்யுடு கூல்டு, 1-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 26.63 பிஎச்பி மற்றும் 23.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். அத்துடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

முன்பக்கத்தில் 37 மிமீ யுஎஸ்டி ஃபோர்க் உடன் டெலஸ்கோபிக்கும், பின்பக்கத்தில் நைட்ரக்ஸ் உடன் அட்ஜெஸ்டபிள் மோனோஷாக்கும் வழங்கப்படுகின்றன.

Spread the love