May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பழம், காய்கறி அதிகம் சாப்பிடுங்கள்

கோடையை சமாளிக்க சுகாதாரத்துறை யோசனை

சென்னை, மே 5

கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ள பொது சுகாதாரத்துறை சில ஆலோசனை மற்றும் வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்திய வானிலை மையத்தின் அறிவுரைப்படி தற்பொழுது சென்னை, வேலூர், மதுரை, கரூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருச்சி, திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. அதனால் பொதுமக்கள் அனைவரும் இது தொடர்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும். உங்களுக்கு தாகம் இல்லாவிட்டாலும், முடிந்தவரை போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும். தாகம் நீரிழப்பின் ஒரு நல்ல குறியீடு அல்ல.
பயணத்தின் போது குடிநீரை எடுத்துச் செல்லுங்கள். ஓ.ஆர்.எஸ். மற்றும் எலுமிச்சை தண்ணீர், இளநீர், மோர், பழச்சாறுகள் போன்ற வீட்டில் தயாரிக்கப்பட்ட பானங்களை சிறிது உப்பு சேர்த்து உட்கொள்ளவும்.

முலாம்பழம், கஸ்தூரி முலாம்பழம், ஆரஞ்சு, திராட்சை, அன்னாசி, வெள்ளரி அல்லது உள்நாட்டில் கிடைக்கும் பிற பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற அதிக நீர்ச்சத்து கொண்ட பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ணுங்கள்.

Spread the love