October 17, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பழைய கார்கள் வர்த்தகத்தில் ஓலா களமிறக்கம்

புது தில்லி, அக்.8

ஓலா நிறுவனம், புதிய மற்றும் பழைய கார்களை வாங்குவதற்காக, ஓலா கார்ஸ் எனும் புதிய வர்த்தக தளத்தை துவக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது:

இந்த ஓலா கார்ஸ் சேவை, அடுத்த ஆண்டுக்குள்ளாக நாட்டில் உள்ள 100 நகரங்களுக்கு விஸ்தரிக்கப்படும் என ஓலா நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதனையடுத்து, ஓலா செயலி வாயிலாக, வாடிக்கையாளர்கள் கார்களை வாங்க இயலும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அருண் சர்தேஷ்முக் இது குறித்து தெரிவித்துள்ளதாவது:
ஓலா கார்ஸ் நிறுவனம், முதல்கட்டமாக பழைய கார்களை விற்பனை செய்யவுள்ளது. இதன் பிறகு, அடுத்த கட்டத்தில், ஓலா எலக்ட்ரிக் உள்ளிட்ட புதிய வாகனங்களையும் விற்பனை செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஓலா மட்டுமின்றி பிற நிறுவனங்களின் புதிய கார்களும் விற்பனை செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

முதலில் 30 நகரங்களில் இந்த சேவை வழங்கப்படும். அடுத்த ஆண்டில், 100 நகரங்களுக்கு விரிவு படுத்தப் படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். ஓலா கார்ஸ் நிறுவனம் ஏற்கனவே சந்தையில் இருக்கும், “கார்தேக்கோ, கார்ஸ் 24, ட்ரூம்’ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love