May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பழ ஈ தாக்குதல் மற்றும் கட்டுப்பாடு முறைகள்

இன்றைய காலகட்டத்தில் பழங்கள் காய்கறிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் பழ ஈ தாக்குதலில் 15 சதவீகிதம் பாதிக்கப்படுகின்றன. பழ ஈ தாக்குதல் மா, கொய்யா, பப்பாளி மற்றும் பூசணி வகை குடும்பத்தை சார்ந்த அனைத்து காய்கறி பயிர்களையும் தாக்குகிறது. இதனால் விற்பனை தரம் பாதிக்கப்படுவதுடன் வருமானம் இழப்பு விவசாயிகளுக்கு ஏற்படுகிறது. ஆரம்பத்திலேயே இதனை எளிய முறையில் கட்டுப்படுத்தலாம்.

பழ ஈ உருவில் சிறியதாகவும் அதிக முட்டைகள் இடும் திறன் கொண்டதாக இருப்பதால் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கும்.

பழ ஈ யை கண்டறிதல்
ஈக்கள் மிகச் சிறியதாகவும் ஆரஞ்சு அல்லது பழுப்பு கலந்த சிவப்பு நிறத்துடன் கண்ணாடி இறக்கைகளை கொண்டு இருக்கும். பெண் ஈக்கள் காய் மற்றும் பழங்களின் தோலுக்கடியில் துளையிட்டு முட்டை இடும். பின்னர் ஓரிரு நாட்களில் இளம் புழுக்கள் வெளியே வரும். இளம் புழுக்கள் வெண்மை நிறத்தில் கால்கள் இல்லாமல் வெளியே வரும். நன்கு வளர்ந்த புழுக்கள்
மண்ணுக்கு அடியில் சென்று கூட்டு புழுவாக மாறும்.

சேத அறிகுறிகள்
இளம் புழுக்கள் காய்கள் துளைத்து சதைப் பகுதியை உண்ணும். புழு துளைத்து பகுதியில் மேல் பரப்பில் பழுப்பு நிற நிர் கசிந்து பழங்கள் மற்றும் காய்கறிகளின் சந்தை மதிப்பை கெடுக்கும்.

கட்டுப்படுத்தும் முறைகள்
கோடை உழவு களைகள் அகற்றுதல், காய்கள் மற்றும் பழங்களின் மீது பாலிதீன் பைகளை கொண்டு மூடுதல், ஏக்கருக்கு 20 கருவாட்டு பொறி மற்றும் 5 இனக்கவர்ச்சி பொறி வைத்தல்.

தகவல் : அக்ரி சு சந்திரசேகரன், வேளாண் ஆலோசகர், அருப்புக்கோட்டை, 94435 70289.

Spread the love