May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பவர்ஃபுல் கோனா என் கார் ஹூண்டாய் நிறுவனம் வெளியீடு

புது தில்லி, ஏப்.28

அதிசெயல்திறன் மிக்க கோனா என் கார் மாடலை ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது:

கோனா காரின் அடிப்படையில் புதிய பெர்ஃபார்மென்ஸ் மாடலை ஹூண்டாய் உருவாக்கி இருக்கிறது. கோனா என் என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த புதிய மாடல் செயல்திறனில் அசத்தலாக இருக்கும் என்பது உறுதியாகி இருக்கிறது.

இதில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 276 பிஎச்பி பவரையும், 392 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக வர இருக்கிறது. இந்த காரில் 8 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

0 – 100 கிமீ வேகத்தை 5.5 வினாடிகளில் எட்டிவிடும் என தெரிவித்துள்ளது. மணிக்கு 240 கிமீ வேகம் வரை செல்லும் திறனை பெற்றிருக்கிறது. லான்ச் கன்ட்ரோல் தொழில்நுட்பமும் இடம்பெற்றிருக்கிறது.

புதிய ஹூண்டாய் கோனா காரின் முகப்பு சாதாரண மாடலைவிட அதிக வசீகரமான அம்சங்களுடன் மாற்றப்பட்டுள்ளது. இந்த காரில் மெல்லிய வடிவிலான எல்இடி பகல்நேர விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. ரூஃப் ஸ்பாய்லர், இரட்டைக் குழல் சைலென்சர் அமைப்பு, சிவப்பு வண்ண அலங்கார விசயங்கள் இந்த கார் அசத்துகின்றன.

புதிய ஹூண்டாய் கோனா என் காரின் உட்புறம் முழுமையான கருப்பு வண்ணத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், அல்கான்ட்ரா அப்ஹோல்ஸ்ட்ரி, ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே ஆகியவையும் மிக முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

இந்திய சந்தையில் இதன் அறிமுகம் குறித்து குறிப்பிடப்படவில்லை.

Spread the love