May 10, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஈரோடு, மே 4

நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மழை பெய்து வருவதால், பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை, நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதிகளில், கடந்த இரண்டு நாட்களாக, பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு, நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை, 238 கன அடியாக இருந்த நீர்வரத்து, திங்கள்கிழமை மதியம், 4,233 கனஅடியாகவும், மாலையில், 4,511 கன அடியாக அதிகரித்தது. மாலை நிலவரப்படி, அணை நீர்மட்டம், 88.28 அடி, நீர் இருப்பு இருந்தது. அணையிலிருந்து அரக்கன்கோட்டை தடப்பள்ளி வாய்க்கால் பாசனத்துக்கு, 700 கனஅடி தண்ணீர், குடிநீருக்காக, 200 கன அடி என, 900 கன அடி தண்ணீர், பவானி ஆற்றில் திறக்கப்படுகிறது.

Spread the love