June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 5,627 கன அடியாக அதிகரிப்பு

ஈரோடு, மே 28

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. நீர்வரத்தை காட்டிலும் அணையில் இருந்து பாசனத்துக்காகவும், குடிநீருக்காகவும் அதிக அளவில் தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வந்தது.

இந்நிலையில் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் உயர்ந்து நேற்று காலை நிலவரப்படி 82.32 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 5,527 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

Spread the love