June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலைய வல்லுநர் விதை உற்பத்தி திடலில் கண்காணிப்புக்குழு ஆய்வு

ஈரோடு, ஏப்.21

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்கள் ஒவ்வொரு ஆண்டும் உயர் விளைச்சல் தரும் பயிர் இரகங்களை கண்டறிந்து வெளியிட்டு வருகின்றது. அவ்வாறு வெளியிடப்பட்ட உயர் விளைச்சல் இரகங்களின் கரு விதைகளைக் கொண்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை மற்றும் வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்களில் விதைப்பண்ணைகள் அமைத்து வல்லுநர் விதை உற்பத்தி செய்து மாநில அரசு விதைப்பண்ணைகளுக்கு விதை பெருக்கத்திற்காகவும் விவசாயிகளுக்கு சாகுபடிக்காகவும் வழங்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு அமைக்கப்படும் விதைப்பண்ணைகளை ஆய்வு செய்து வயல் ஆய்வு தரத்தினை துல்லியமாக கடைபிடித்து தரமான விதைகளை உற்பத்தி செய்வதை உறுதி செய்திடும் பொருட்டு வல்லுநர் விதை உற்பத்தி கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு இக்குழுவானது விதைப்பயிர் பூப் பருவம், அறுவடைப்பருவம் மற்றும் விதைக்குவியல் விதைசுத்தி ஆகிய நிலைகளில் ஆய்வு செய்து விதைத்தரத்தினை உறுதி செய்கின்றது.

இந்நிலையில் நடப்பு பருவத்தில் பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் நெல்- ஐசு 20 மற்றும் பாசிப்பயிறு ஊழு-8 இரகத்தில் வல்லுநர் நிலை விதைப்பண்ணை அமைக்கப்பட்டு விதைப்பயிர் பூப் பருவத்தில் உள்ளது. மேலும் நெல் ஐசு 50, பாசிப்பயிறு ஊழு-7 மற்றும் உளுந்து ஏடீN-9 அறுவடைப்பருவத்தில் உள்ளது. பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைலர் முனைவர் சக்திவேல், பேராசிரியர்கள் உத்தராசு, தேவாணந், குமரேசன் மற்றும் ஈரோடு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் சு.மோகனசுந்தரம் மற்றும் பவானிசாகர் விதைச்சான்று அலுவலர் அ.மாரிமுத்து அடங்கிய வல்லுநர் விதை உற்பத்தி கண்காணிப்புக்குழு ஆய்வு செய்தது. ஆய்வின் போது விதைப்பயிர் நடவு முறை, விதைப்பயிரில் பிற இரக கலவன்கள், பயிர் விலகு தூரம், குறித்தறிவிக்கப்பட்ட நோய்கள் போன்றவற்றையும் ஆய்வு செய்தனர். மேலும் தரமான வல்லுநர் விதைகளை உற்பத்தி செய்திட தேவையான அனைத்து நடைமுறைகளையும் கடைபிடிக்க களப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Spread the love