May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பவானியை அடுத்த குருப்பநாய்க்கன்பாளையத்தில் ஊரக இளைஞர்களுக்கு சான்று விதை உற்பத்தி பயிற்சி

ஈரோடு, மே 6

தமிழக அரசின் வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் ஊரக இளைஞர்களுக்கு சான்று விதை உற்பத்தி பயிற்சி 30 நாட்களுக்கு அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியின் ஒரு பகுதியாக பவானியை அடுத்த குருப்பநாய்க்கன்பாளையத்தில் அமைந்துள்ள அரசு விதைப்பண்ணையில் ஈரோடு, விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் சு.மோகனசுந்தரம், உளுந்து, வம்பன் 8 இரகம் விதை உற்பத்தி குறித்து பயிற்சியளித்தார். இப்பயிற்சியின் போது பயறுவகைப் பயிர்களில் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்ப பயிற்சி, கலவன்களை கண்டறிதல் மற்றும் அகற்றுதல் தொடர்பாக களப் பயிற்சியளிக்கப்பட்டது.

மேலும், அரசு விதை சுத்திகரிப்பு நிலையத்தில் வயல்மட்ட விதைகளை சுத்தி நிலையத்தில் பெறும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், சுத்திப்பணி மேற்கொள்ளுதல், விதை மாதிரி எடுத்தல், தேர்ச்சி பெற்ற விதைக்குவியல்களுக்கு சான்றட்டை பொருத்துதல் தொடர்பாக பயிற்சியளிக்கப்பட்டது. இப்பயிற்சியின் போது மா.குமாரசாமி, வேளாண்மை உதவி இயக்குநர், பவானி, முருகேசன், பண்ணை மேலாளர், மா.கணேசமூர்த்தி, விதைச்சான்று அலுவலர் (தொழில் நுட்பம்), மு.நாசர் அலி, விதைச்சான்று அலுவலர், பவானி ஆகியோர் உடனிருந்தனர்.

Spread the love