June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பாதுகாப்பான முறையில் பயிர் பாதுகாப்பு மருந்துகளை கையாளுதல் பயிற்சி

மதுரை, ஜூன் 2

மதுரை கிழக்கு வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் 2.6.22 அன்று ஆண்டாரகொட்டாரம் கிராமத்தில் பாதுகாப்பான முறையில் பயிர் பாதுகாப்பு மருந்துகளை கையாளுதல் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சிக்கு ஆண்டாரகொட்டார கிராம ஊராட்சிமன்ற தலைவர் சீமான், முன்னிலை வகித்தார். மதுரை மேற்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர், இரா.வளர்மதி, கலந்து கொண்டு பூச்சி மருந்துகளின் பயன்பாடுகள் குறித்தும், பூச்சி மருந்துகளை உபயோகிக்கும் முறைகள் பற்றியும் விளக்கினார். ஒய்வுபெற்ற வேளாண்மை அலுவலர் குணசேகரன், பூச்சி மருந்துகளை பாதுகாப்பான முறையில் உபயோகிக்கும் முறைகள் குறித்தும், மருந்து தெளிப்பவருக்கான உடைகளின் அவசியங்கள் குறித்தும் விவசாயிகளிடம் தெளிவாக விளக்கினர். பூச்சி மருந்துகள் உபயோகிக்கும் முறைகளையும் மற்றும் மருந்து தெளிப்பவர் பாதுகாப்பான முறையில் முகக்கவசம், கையில் உறை, கண்கண்ணாடி கவச உடை அணிந்து தெளிக்கும் முறைகள் பற்றி செயல்விளக்கமாக விவசாயிகளிடம் செய்து காண்பிக்கப்பட்டது. இப்பயிற்சியானது 40 விவசாயிகளைக் கொண்டு நடைபெற்றது. இப்பயிற்சிக்ககான ஏற்பாடுகளை அட்மா திட்டப்பணியாளர்களான மூவேந்திரன் மற்றும் யுவராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

Spread the love