August 15, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பாதுகாப்பான முறையில் பூச்சி மருந்து தெளித்தல் பயிற்சி

ஈரோடு, ஜூலை 8

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்ட ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டாரம், சிக்கரசம்பாளையம் கிராமம், பீக்கிரிபாளையம் ராமர் மேடு பகுதியில் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் ஒரு நாள் பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சிக்கு சத்தியமங்கலம் வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு) கு.கற்பகம் தலைமை தாங்கினார்.

மேலும் இப்பயிற்சியில் வேளாண்மை துணை இயக்குர் (நுண்ணீர் பாசனம்) சிவக்குமார் கலந்து கொண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார். விதையில் ரகங்கள் தேர்வு செய்யும் முறை, தரமான விதைகள் உற்பத்தி செய்தல், சரியான பருவத்தில் விதைப்பு மேற்கொள்ளுதல் மற்றும் கலப்பு ரகப் பயிர்களை வயலில் ஆய்வு மேற்கொண்டு அப்புறப்படுத்தி கலப்பு இல்லாத விதைகளை உற்பத்தி செய்தல் குறித்தான விவரங்களை விதைச்சான்று அலுவலர் அருணாதேவி விளக்கம் அளித்தார்.

இதனை தொடர்ந்து வேளாண்மை அறிவியியல் நிலையம் அலுவலர் பார்த்திபன், கலந்து கொண்டு பூச்சி மருந்துகளை பாதுகாப்பான முறையில் கையாளுதல் மற்றும் தெளித்தல் குறித்து விளக்கி கூறினார். மேலும் டீயுளுகு பூச்சி மருந்து நிறுவனம் பணியாளர்கள் கலந்து கொண்டு பாதுகாப்பான முறையில் பூச்சி மருந்தினை கையாளுதல் மற்றும் தெளித்தல் குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.

இப்பயிற்சியில் பெ.பிரகாஷ், துணை வேளாண்மை அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர் கோகிலா மற்றும் உதவி தொழில் நுட்ப அலுவலர்கள் தங்கராசு, மீரா மற்றும் சிக்கரசம்பாளையம் கிராம விவசாயிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டார்.

Spread the love