June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பான்கார்டு குறித்த தகவல்

இன்றைய கால கட்டத்தில விவசாயிகள், வேளாண் தொழில் முனைவோர், இளம் விவசாயி, மகளிர்க்கு, பான்கார்டு (PAN CARD) அவசியமான ஒன்றாகும். இந்திய குடிமகன் ஓவ்வொருவரும் பண பரிவர்த்தனையில் ஈடுபட பாதுகாப்பான, நம்பகமான முறையில் இருக்க உதவுவது பான் கார்டு தான். நிரந்தர கணக்கு எண் கொண்ட இந்த பான்கார்டு 10 எழுத்துகள் கொண்ட குறியீடு. இந்த எண் நிரந்தரமானது. பான்கார்டு குறித்து அறிந்தவர்கள், அறியாதவர்கள் கூட இது வருமான வரி கணக்கு தேவையானது என்று நினைப்பது தவறானது. ஓன்றிய அரசின் கட்டுபாட்டில் உள்ள என்.எஸ் டி.எல், அமைப்பு இந்த பான் எண்ணை வழங்குகிறது. பான் கார்டு வாங்கும் நடைமுறை வெகு எளிதானது. இந்த கார்டு வாங்குவதற்கு வயது வரம்பு கிடையாது. இந்த கார்டு ஆதார் அடையாள அட்டை போல அரசின் அமைப்பு வழங்கும் நிரந்தர கணக்கு எண்ணாகும். நீங்கள் வருமான வரி கட்டினாலும் கட்டவில்லை என்றாலும் உங்களுக்காக ஓதுக்கப்பட்ட எண் இது. பான்காடு வாங்கிட தேவையான ஆவணங்கள் புகைப்படம், முகவரி சான்று, வயது சான்று, இவற்றை பான்கார்டு வாங்கிக்கொடுக்கும் முகவர் முலம் எளிதாக வாங்கிடலாம்.

தகவல் : அக்ரி சு.சந்திர சேகரன், வேளாண் ஆலோசகர், அருப்புக்கோட்டை.

Spread the love