May 20, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பான் அமெரிக்கா 1250 பைக் ஹார்லி டேவிட்சன் அறிமுகம் ஆரம்ப விலை இவ்வளவா…?

பான் அமெரிக்கா 1250 பைக்கை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது ஹார்லி டேவிட்சன் நிறுவனம்

இந்த மோட்டார் சைக்கிளின் அறிமுக விலை ரூ.16.90 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அட்வென்ச்சர் டூரர் ரகத்தில் இந்தப் பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ப்ளூடூத் இணைப்பு டிஎஃப்டி டச் ஸ்க்ரீன், யுஎஸ்பி சி சார்ஜிங் வசதிகளுடன் எல்இடி டெகரேடிவ் அம்சங்களைப் பெற்றுள்ளது.

அத்துடன் அட்ஜஸ்டபிள் எலெக்ட்ரானிக் சஸ்பென்ஷன், டயர் பிரஷ்ஷர் மானிடரிங் சிஸ்டம், சென்டர் ஸ்டாண்ட், ஹீடட் க்ரிப், ஸ்டியரிங் டேம்பர் உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்தப் பைக்கில் 1252 சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஆடம்பர அட்வென்ச்சர் பிரியர்களுக்கு இந்தப் பைக் நல்ல தேர்வாக இருக்கும்.

Spread the love