September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பாரதியார் திருவுருவச் சிலைக்கு அமைச்சர், ஆட்சியர் மரியாதை

மதுரை, செப்.11

மதுரை மாவட்டம் மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டை முன்னிட்டு மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் ஆட்சியர் அனீஷ் சேகர் மாலை அணிவித்து மரியாதை செய்து தெரிவிக்கையில்:

மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டை முன்னிட்டு மகாகவி பாரதியின் பெருமையைப் போற்றும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை சட்டமன்றத்தில் வெளியிட்டுள்ளார். இந்த ஓராண்டு காலத்திற்கு பல்வேறு ஊடகங்கள் மூலமாகவும் கலைநிகழ்ச்சிகள் மூலமாகவும் குறிப்பாக மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலமாகவும் கிராமங்களில் மகாகவி பாரதியாரின் சிறப்புகள் பற்றி எடுத்துரைக்கப்படும் என கூறியுள்ளார்கள்.

பொதுவாக மாணவர்களுக்கு மகாகவி பாரதியின் கவிதைகளை ஒப்பிவிக்கும் வழக்கம் உள்ளது. அதிலே திறமையானவர்களை தேர்ந்தெடுத்து ஆய்வுகள் நடத்தி விருதுகள் மற்றும் 3 லட்சம் நிதியும் வழங்கப்படும் என்றும்இ மகாகவி பாரதியின் கைழுத்துப் பிரதிகள் தொகுக்கப்பட்டு செம்பதிப்பாக வெளியிடப்படும் என்றும்இ அவரின் கவிதைகள் மற்றும் பாடல்கள் அனைத்தும் மொழிபெயர்க்கப்படும் என்றும்இ பாரதியின் வாழ்வை சிறுவர்கள் அறியும் வகையில் சித்திரைக் கதைகள் அடங்கிய நூல்கள் மற்றும் வண்ண ஓவியங்கள் அடங்கிய நூல்கள் வெளிடப்படவுள்ளது எனவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் மகாகவி பாரதியாருக்கு புதிய சிலை அமைக்க வேண்டுமென்ற நிர்வாகத்தினரின் கோரிக்கை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் மற்றும் மதுரை மேற்கு வட்டாட்சியர் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Spread the love