October 23, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பாரம்பரிய நெல் இரகங்களின் ஊட்டச்சத்து, மருத்துவ குணங்கள் மற்றும் மதிப்புக்கூட்டிய பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

நாகப்பட்டினம், அக்.9

நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் அட்மா திட்டம், திருமருகல் இணைந்து பாரம்பரிய நெல் இரகங்களின் ஊட்டச்சத்து, மருத்துவ குணங்கள் மற்றும் மதிப்புக்கூட்டிய பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி 07.10.2021 அன்று கீழபூதனுர் கிராமத்தில் நடத்தப்பட்டது. இப்பயிற்சியில் பாரம்பரிய நெல் இரகங்கள்-ஒரு முன்னோட்டம், பாரம்பரிய நெல் வகைகள், பாரம்பரிய நெல் இரகங்களில் செறிந்துள்ள ஊட்டச்சத்துக்கள், பாரம்பரிய நெல் இரகங்களின் மருத்துவ குணங்கள் மற்றும் பாரம்பரிய நெல் இரகங்களிலிருந்து தயாரிக்கக்கூடிய மதிப்புக் கூட்டிய பொருட்கள் – செயல்முறை விளக்கம் ஆகியவை குறித்து மனையியல் தொழில்நுட்ப வல்லுநர் முனைவர் ஆ.மதிவாணன், விரிவாக விளக்கினார். நிகழ்ச்சியின் தொடக்கமாக திருமருகல் உதவி வேளாண்மை அலுவலர் அனைவரையும் வரவேற்றார். அட்மா திட்டத்தின் மேலாளர் மகேஸ்வரி, அட்மா திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். கீழபூதனுர் பஞ்சாயத்து தலைவர் நிகழ்ச்சிக்கு தலைமையேற்று பாரம்பரிய நெல் இரகங்களின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகள் மற்றும் பண்ணை மகளிரிடையே பேசினார். இப்பயிற்சியில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பண்ணை மகளிர் கலந்து கொண்டு பயனடைந்தனர். பயிற்சியில் கலந்து கொண்ட அனைருக்கும் உயிர் உரங்கள் மற்றும் பயிற்சி கையேடு வழங்கப்பட்டது.

Spread the love