August 14, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பாரம்பரிய நெல் இரகங்களும் அதன் மருத்துவக் குணங்களும்

தேனி, ஜூலை 8

நோயில்லா வாழ்வு வாழ நாம் மீண்டும் பாரம்பரிய விவசாயத்திற்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என தேனி விதைப்பரிசோதனை அலுவல் மகாலெட்சுமி மற்றும் வேளாண்மை அலுவல்கள் சத்தியா, மகிஷா தேவி தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறுகையில், பாரம்பரிய நெல் இரகங்கள் வறட்சியையும், வெள்ளத்தையும் தாங்கி வளரக்கூடிய தன்மை உடையது. பெரும்பாலானவை பூச்சி மற்றும் நோய் எதி்ப்பு சக்தி கொண்டவை. இவை நேரடி விதைப்பு மற்றும் நடவிற்கும் உகந்தவை. இது 150 செ.மீ. முதல் 162 செ.மீ வரை வளரக்கூடியது. ஆகையால், அதிக சத்தான கால்நடைத் தீவனம் கிடைக்கும். மேலும் இவை எளிதில் ஜீரணமாகக்கூடியவை, மலச்சிக்கலை நீக்கும், நரம்புகளை பலப்படுத்துதல் போன்ற பல்வேறு மருத்துவக் குணங்களை உள்ளடக்கியது. அதிக சுவை உடையது, அதிக நா்ச்சத்தும், புரதசத்தும் நிறைந்தது. மேலும் இவை நிறம், மணம், மரபுவழி நன்மைகளைக் கொண்டவை. விவசாயிகள் இது போன்ற இரகங்களை சாகுபடி செய்தால் மக்கள் மத்தியில் நுகர்வு விழிப்புணர்வு ஏற்படும். அதுமட்டுமல்லாமல் பாரம்பரிய நெல் இரகங்கள் அடுத்த அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லப்படும். பாரம்பரிய நெல் இரகங்களான பூங்கார் புயல், வெள்ளம், வறட்சி ஆகியவற்றை தாங்கி வளரும். மேலும், உடம்பில் சுரக்கும் கெட்ட நீரினை வெளியேற்றும் தன்மை கொண்டது. இதில் தூத்தநாக சத்து அதிக அளவில் உள்ளது. சிவப்பு கவுனி இதயத்தைப் பலப்படுத்தும். இரத்த ஓட்டத்தை சீ்ர்படுத்தும். மேலும், மூட்டுவலியை நிவர்த்தி செய்யும் வல்லமை கொண்டது. குள்ளக்கார் அரிசி உடல்பருமனை குறைக்க உதவுகிறது. தூயமல்லி பூச்சி மற்றும் நோய் எதி்ப்பு சக்தி கொண்டது. குடவாழை குடலை வாழ வைப்பதால் இப்பெயர் பெற்றது. சர்க்கரை நோய் வராமல் தடுக்கும், செரிமான பிரச்சினை, வயிறு பிரச்சினையைக் குணப்படுத்தும். கருடன் சம்பா வடிகால் வசதியுடைய நிலங்களில் நன்றாக இருக்கும். சாப்பாட்டிற்கு உகந்தது, புட்டு செய்ததற்கு மிகவும் உகந்தது. கருப்பு கவுனி புற்றுநோய் எதிர்ப்பையும், இன்சுலின் சுரப்பையும் மேம்படுத்துகிறது. ஊடலில் இருந்து நச்சுத்தன்மையுள்ள கழிவுகளை வெளியேற்றும், நார்ச்சத்து மற்றும் 18 அமினோ அமிலங்கள் உள்ளன. குழியடிச்சான் அரிசி உப்பு மண்ணிலும், வறட்சி நிலையைத் தாண்டி வளரும். பெண்களின் ஆரோக்கியத்திற்கு உகந்ததாகும் என தெரிவித்தனர்.

Spread the love