August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பாரம்பரிய பூச்சிக்கொல்லிகள் தயாரிப்பு முறைகள்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வாழவச்சனூர், திருவண்ணாமலை மாவட்டம்
அனிஷா.ந, அனிதா.அ, பவதாரணி.கா, தனுஸ்ரீ.அம, கார்கிசுரேஷ், ஹரிதாசி, இளயநிலாரா, மரியவினிடாஜா, மோகனபிரியாசெ, ரூபஸ்ரீபி,
சாய்சுரேகாமு, பாரம்பரிய பூச்சிக்கொல்லிகள் தயாரிப்பு முறைகள் குறித்து பின்வருமாறு விளக்கமளித்தனர்.

பூச்சி விரட்டிகள்

வேப்ப இலைசாறு

5 கிலோ வேப்ப இலையை நன்றாக அரைத்து 6 லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும். இக்கலவையை காலையில் நன்கு கொதிக்க வைத்து, அக்கலவையுடன் 150 கிராம் சோப்புதூள் சேர்த்து, மற்றும் 60 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும்.

புங்கை இலைசாறு

கர்நாடக விவசாயிகள் நதி பக்கங்களிலும், சாலை பக்கங்களிலும் மற்றும் காடுகளிலும் மற்றும் நடவுக்கு முன் தண்ணீர் தேங்கி நிற்கும் வயல்களிலும் இருக்கும் புங்கை இலையை சேகரித்து, இந்த இலைகளை நன்றாக மண்ணில் 2 அல்லது 3 நாட்கள் முற்றிலும் மட்கிய பிறகு சேற்றுழவு செய்கின்றனர்.

எருக்கு இலைசாறு

1 கிலோஎருக்குஇலையைஅவற்றின்பாலுடன்சேகரித்து, அவற்றைநன்குசுத்தம்செய்து, அவற்றைநறுக்கிநன்றாகஅரைத்துக்கொள்ளவேண்டும். இக்கலவையை 50 லிட்டர்நீருடன்கலந்துவடிகட்டிதெளிக்கலாம்.

காட்டாமணக்கு தாவர இலை சாறு

சுத்தமான காட்டாமணக்கு தாவர இலை மற்றும் தண்டை சுத்தமான நீருடன் நன்கு அரைக்க வேண்டும், இந்த எண்ணெய் பசையுடன் கூடிய 5 கிலோ காட்டாமணக்கு சாறு கலவையை 5 லி மாட்டு சிறுநீருடன் ஒரு நாள் இரவு முழுவதும் வைக்க வேண்டும் மற்றும் 3-4 மணி நேரம் 2 லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இந்த கலவையை 5 லிட்டர் அடர் கலவையாகும் போது அவற்றை ஒரு காடா துணியின் மூலம் வடிகட்டி தெளிக்க வேண்டும்.

கற்றாழைசாறு

சாலை ஓரங்களில் வளர்ந்திருக்கும் கற்றாழை வெட்டி, சுத்தம்செய்து, துண்டுகளாக நறுக்கி அவற்றை நன்றாக அரைக்க வேண்டும். இவற்றை நல்ல சுத்தமான தண்ணீருடன் கலந்து 24 மணி நேரம் ஊற வைத்து நன்கு கலக்கி மஸ்லின் துணி கொண்டு வடிகட்ட வேண்டும். இந்த கலவை 100 மி.லிட்டருடன் 500 மி.லி மாட்டு சிறுநீர் மற்றும் 10 கிராம் சோப்பு தண்ணீரை கலந்து தெளிக்க வேண்டும்.

பூண்டு கிராம்பு சாறு

சுத்தமான பூண்டை துண்டுகளாக வெட்டி அவற்றை நன்கு அரைத்து அவற்றை அதன் சம அளவு மண்ணெய்யில் ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். இச்சாற்றை நன்றாக கலக்கி காடா துணியில் வடிகட்ட வேண்டும். இச்சாற்றுடன் 150 கிராம் சோப் தூளை கலந்து ஒரு சுத்தமான பாட்டிலில் சேமித்து வைக்கலாம்.

அரளி விதை சாறு

அரளி விதைகளை சேகரித்து, சில நாட்கள் நிழலில் உலர வைத்து, அதை தூள் செய்து, இத்தூளை சலித்து நீருடன் கலந்து ஒரு நாள் இரவு முழுவதும் இடையூறுயின்றி ஊற வைத்து, பின் காடா துணியில் வடிகட்டி தெளிக்க வேண்டும்.

வேம்பு எண்ணெய் தெளிப்பு

வேப்ப எண்ணெய் (3 லி) 200 மிலி சோப்பு கரைசலுடன் கலந்து ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும்.

Spread the love