August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பால் தந்தால் தான் பசுவுக்கு நிறைய தீவனம் தருவீர்களா?

பசுவை லட்சுமி என்றும் கோமாமதா என்றும் அழைத்தாலும் விவசாயிகளில் பலர் அதிக அக்கறை எடுத்து பசு பால் தரும் போது மட்டும் கவனிப்பதும் கறவை வற்றியதும் கண்டு கொள்ளாமல் ஏனோ தானோ என்று உயிர் வாழ்ந்தால் போதும் என்ற பாணியில் பசுக்களை அலையவிடும் பழக்கம் தவறானது. மேலும், தரமான தீவனம் தருவதை நிறுத்துவதும் தவறு. இது சொந்த காசிலே சூனியம் வைத்துக் கொள்வது போலத் தான்.

கன்றுக்காக உள்ள பாலை மனிதன் அபகரிப்பதே சுய நலத்தால் தான் என்ற போதிலும், தன் கருமித் தனத்தை மாட்டிடமா காட்ட வேண்டும். மனிதர்களை அண்டி வாழ இறைவன் கொடுத்த கொடை தான் கால்நடைகள். கிட்டத்தட்ட 4000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே மனிதர்களுடன் கால்நடைகள் வளர்ந்து உதவி வருகின்றன. பால் கறக்காத மாட்டுக்குத் தீவனம் போட்டால் கட்டுபடி ஆகாது என்றும் வாதிடும் பலருக்கும் தெரிவதில்லை, தன் வினை தன்னைச் சுடும் என்று. இதில் நாட்டு மாடு தேவதை என்று டயலாக் வேறு. எந்த மாடாக இருப்பினும் அதன் ஆயுட்காலத்தில் மாடாக உழைக்கும். ஆண்டுக்கு ஒரு முறை, ஒரு கன்று போட வேண்டும் என்பதும் பல்கிப் பெருகி பண்ணையை அதிகரித்திடும், அபரிதமான வாய்ப்பு கால்நடைகளுக்கு மட்டுமே உண்டு என்பதை அறியாமல் ஒரு கன்று போட்டால் காளை என்றால் விற்று விடுவதும் பசுவற்கு அளவான அக்கறை, கன்றுக்கு ஏனோ தானோ என்று உணவு தரமானதாக உண்ணத்தராமை தண்டனை தரத்தக்க குற்றமே. முறையாகப் பேணிட பத்து கிலோ மீட்டர் சுற்றளவில் ஒரு கால்நடை மருத்துவமனைகள் இருக்கும். இந்த காலத்தில் கையிலே செல்போன் எனும் ஒரு நூலகத்தின் சாவியையே வைத்துக் கொண்டு பசுவை பேணிட எனக்கு தெரியாது என்பதோ தனக்கு கால்நடை மருத்துவர்கள் எவரும் இது குறித்து ஆலோசனைகள் ஏதும் தரவில்லை என்பதும் பொய்யான வாதங்கள் ஆகும்.

அதிக செலவு செய்து தான் பசுக்களைப் பேண வேண்டும் என்பதில்லை. முறையான தீவனத் திட்டம் வகுத்து சிறப்பாக பலவகை தாவரக் கலப்பு உணவு, தாது உப்பு மற்றும் புல் வகைகளில் கோ 4 ரக புல் வகைகள் மாடு கழிக்காமல் உண்ணும். மேலும் பயறு வகை தீவன ரகங்கள் சாகுபடி செய்து வெட்டி போடுதல், அசோலா உணவு தயாரிப்பு, ஹைட்ரோ போனிக்ஸ் எனும் வெள்ளை மக்காச் சோளம், பார்லி, கோதுமை முதலியவற்றை ட்ரே முறையில் தயாரித்து உணவாக தருதல், பிண்ணாக்கு வகைகள், தவிடு, பருத்திக் கொட்டை, புளியங்கொட்டை, கோதுமை தவிடு, கொள்ளு, தாது உப்புக் கலவை, பருத்திக் கொட்டை ஆட்டிய உணவு, கடலைக் கொடி, ஊறுகாய்ப்புல் எனும் சைலோ உணவுகள், ராகி, சோயா மொச்சை, அரிசி குருணை, இலை, தழைகள் மல்பெரி இலைகள், இப்படி எத்தனையோ வகைகளில் ஊட்டம் தரலாம்.

பசுமாட்டின் உடல் எடைக்கு தக்கவாறு தீவனம் தருவோம்! நன்கு பேணி நலமான வாழ்வு வாழ உதவுவோம். கால்நடை பற்றி பயிற்சிகள் தர பல மையங்கள் தமிழகத்தில் உள்ளன.

மேலும், விவரம் பெற டாக்டர் பா.இளங்கோவன் 98420 07125 உள்ளது-

Spread the love