பாவட்டை மெல்லிய காம்புள்ள இலைகளை எதிரடுக்கில் கொண்ட குறுஞ்செடி. கொத்தான வெண்ணிற மலர்களை உச்சியில் கொண்டது. புதர் காடுகளில் தானாக வளரக்கூடியது. இலை, காய், வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை. இலை சிறுநீர் பெருக்கி, மலமிளக்கும், தாது பலம் கொடுக்கும். மலமிளக்கும் பாவட்டை வேர் அல்லது இலை கொன்றை சிற்றாமுட்டி வேலிப்பருத்தி இவற்றின் வேர், மிளகு, ஓமம் வகைக்கு 10 கிராம் இடித்து 4 லிட்டர் நீரிலிட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வடித்து வேளைக்கு 30 மில்லி தினம் மூன்று வேளை கொடுத்து வர வாத சுரம் போகும். பாவட்டை வேர், பூலாப்பூ சமனளவு அரைத்து கனமாக பூச அரையாப்புக் கட்டிகள் கரையும் பாவட்டை காயை சுண்டைக் காய் போலக் குளம்புகளில் சேர்த்து உண்டு வர, வாத, கப, நோய்கள் விரைவில் குணமாகும். இலையை வதக்கி வீக்கம் வலி ஆகியவற்றிக்கு இளஞ்சூட்டில் வைத்துக் கட்ட அந்நோய்கள் குணமாகும். மூல நோய் வலி தீரும். வேர் பொடியுடன் சுக்குத்தூள் சம அளவு கலந்து கழுநீரில் கொடுத்துவர மகோதர வீக்கம் குறையும்.
பாவட்டை

Spread the love