June 20, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பிஎம்டபிள்யூ அட்வென்ச்சர் பைக் ஜப்பானில் அறிமுகம்

மும்பை, மே 5

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2021 பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் மோட்டார்சைக்கிள் ஜப்பான் நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது:

2021 பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் பைக் இந்தியாவில் உள்ள நிறுவனத்தின் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ ஜி310 வரிசையில் ஜி310 ஆர் மற்றும் ஜி310 ஜிஎஸ் என்ற இரு பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதில் ஜி310 ஆர், பேனல்கள் அவ்வளவாக இல்லாத நாக்டு மோட்டார்சைக்கிளாகும்.

குறிப்பிடத்தக்க அப்கிரேட்களுடன் 2021 ஜி310 ஜிஎஸ் பைக் இந்திய சந்தையில் கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அப்கிரேட்களின் ஒரு பகுதியாக யஹட்லேம்ப், டெயில்லேம்ப் & டர்ன் இண்டிகேட்டர் உள்ளிட்ட பகுதிகளில் முழு-டிஜிட்டல் விளக்குகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

அதேபோல் சற்று மறு வடிவம் பெற்ற பெட்ரோல் டேங்க் நீட்டிப்புகளுடன் மொத்த பைக்கின் ஸ்டைலும் சிறிது திருத்தியமைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இதே தோற்றத்தில் தான் 2021 ஜி310 ஜிஎஸ் பைக் ஜப்பானிய சந்தையில் களமிறக்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் ஜப்பான் சந்தையில் 708,000 ஜப்பானிய யயன்னில் அதன் ஜி310 ஜிஎஸ் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.4.79 லட்சமாகும்.

ஆனால் இந்திய சந்தையில் இந்த பிஎம்டபிள்யூ அட்வென்ச்சர் ரக பைக்கின் விலை ரூ.2.90 லட்சமாக தான் உள்ளது. இந்த வகையில் பார்த்தோமேயானால் இந்த பைக் கிட்டத்தட்ட ரூ.1.90 லட்சம் அதிகமாக ஜப்பானில் விற்பனை செய்யப்படவுள்ளது.

Spread the love