சென்னை, மே 5
பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து சிறப்பான திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு போட்டியாக இந்நிறுவனம் தொடர்ந்து மலிவு விலை திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது.
பிஎஸ்என்எல் 4ஜி எஸ்.டி.வி 1098 ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது ட்ரூலி அன்லிமிடெட் டேட்டா ப்ரீபெய்ட் திட்டம் ஆகும். இந்த திட்டம் நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிராந்தியங்களில் உள்ள 4ஜி சேவை சந்தாதாரர்களுக்கு அணுக கிடைக்கும் என பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.
அதன்படி இந்த 4ஜி எஸ்.டி.வி 1098 ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டா நன்மைக்கு எந்தவொரு வேக கட்டுப்பாடும் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்த்தில் ட்ரூலி அன்லிமிடெட் டேட்டா நன்மையை தவிர, வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் கிடைக்கும்.
அதன்பின்பு 4ஜி எஸ்.டி.வி 1098 ப்ரீபெய்ட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற பாடல் மற்றும் இலவச ட்யூன்களும் அணுக கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இதுபோன்ற திட்டங்கள் ஒரு சில இடங்களில் நல்ல வரவேற்பை பெரும் என்று தான் கூறவேண்டும்.
இதேபோன்று பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் 4ஜி எஸ்.டி.வி 599 திட்டம் ஆனது தினசரி 5ஜிபி அளவிலான எஃப்யூபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும். குறிப்பாக 4ஜி எஸ்.டி.வி 599 திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் கிடைக்கும்.
தனது 4ஜி நெட்வொர்க்குகளை விரைவில் அனைத்து இடங்களுக்கும் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. தற்சயம் இந்நிறுவனத்தின் 4G VoLTE சேவை ஆனது இந்தியாவில் ஒரு சில இடங்களில் மட்டுமே கிடைக்கின்றன.