January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பிஎஸ்6 சிஎஃப் மோட்டோ 650ஜிடி பைக் இந்தியாவில் விரைவில் அறிமுகம்

புது தில்லி, மே 8

சீனாவை சேர்ந்த சிஎஃப் மோட்டோ பிராண்டில் இருந்து பிஎஸ்6-க்கு இணக்கமானதாக 650ஜிடி பைக் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிஎஃப் மோட்டோ 650ஜிடி பைக்கின் புதிய டீசர் படம் ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

முந்தைய தலைமுறையில் இருந்து பிஎஸ்6 சிஎஃப் மோட்டோ 650ஜிடி பைக் தோற்றத்தில் பெரிய அளவில் எந்த வேறுப்பாட்டையும் பெறவில்லை. இதனால் இந்த பிஎஸ்6 மாடலும் வழக்கம்போல் பெட்ரோல் டேங்கை சுற்றிலும் பேனல்களால் நிரப்பப்பட்டதாகவே உள்ளது.

இந்த பைக்கில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய முன்பக்க கண்ணாடி, யுஎஸ்பி சார்ஜ் துளை, 12 வோல்ட் சாக்கெட், முழு-எல்இடி விளக்குகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் பிளவுப்பட்ட வடிவத்தில் இருக்கை அமைப்பு உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

கான்செப்ட் நீலம் மற்றும் நெபுலா கருப்பு என்ற இரு விதமான நிறங்களில் விற்பனைக்கு வரவுள்ள பிஎஸ்6 சிஎஃப் மோட்டோ 650ஜிடி பைக் 649.3சிசி, இரட்டை-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜினை பெற்று வரவுள்ளது.

சிஎஃப் மோட்டோ நிறுவனம் சமீபத்தில் தான் இந்திய சந்தைக்கான அதன் 300என்கே பைக்கின் விலையை அறிவித்திருந்தது. 300என்கே பிஎஸ்6 பைக்கின் விலையில் பெரியதாக எந்த மாற்றமும் இல்லை. இதனால் இதே பாணியில் பிஎஸ்4 650ஜிடி பைக்கின் அதன் விலையில் தான் பிஎஸ்6 மாடலும் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love