August 8, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பிரண்டை

பிரண்டை இதில் உருட்டு பிரண்டை முப்பிரண்டை 4 பட்டை பிரண்டை இல பிரண்டை இப்படி பல வகைகள் உள்ளன. சதைப்பற்றான நாற்கோண வடிவத்தண்டுகளையுடைய ஏறு கொடி பற்றுக்கம்பிகளும் மடலான இலைகளும் கொண்டிருக்கும் சாறு உடலில் பட்டால் நமைச்சல் ஏற்படும். சிவப்பு நிற உருண்டையான சதைக் கனி உடையது. இதில் உதடுகளை உடைய மூங்கில் பிரண்டை அல்லது பிரண்டை என்ற எண்ணமும் காணப்படுகிறது. இதை வஜ்ஜிரவல்லி என்றும் குறிப்பிடுவது உண்டு. தானாக வளரக்கூடியது. வேர், தண்டு ஆகியவை மருத்துவப் பயனுடையவை. குடல் வாயு அகற்றல், பசி மிகுத்தல், நுண்புழுக் கொல்லுதல் ஆகிய குணமுடையது. பிரண்டை துவையல் அறியாமையை நீக்கி பசியைத் தூண்டும். பிரண்டைச் சாற்றில் புளி, உப்பு கலந்து காய்ச்சி பொறுக்கும் சூட்டில் பற்றுப்போட சதை பெயர்ச்சி அடிபட்ட வீக்கம், எலும்பு முறிவு, வீக்கம், எலும்பு முறிவு ஆகியவை குணமாகும். பிரண்டை உப்பு, பிரண்டை உலர்த்தி ஒழித்து சாம்பலாக்கி நீரில் கரைத்து தெளித்து காய்ச்சி எடுத்து 2 அரிசி எடை பாலில் மூன்று வேளை கொடுக்க சிறு குழந்தைகளின் பேதி, வாந்தி, பேதி, சீதபேதி நுரைத்த பச்சைப் பேதி தீரும்.

பிரண்டை உப்பு 2 அல்லது 3 அரிசி எடை வெண்ணெயில் கொடுக்க வாய்ப்புண், வாய் நாற்றம், உதடு நாக்கு வெடிப்பு தீரும். பிரண்டை உப்பு ஒரு குண்டுமணி வீதம் வெண்ணை அல்லது நெய்யில் 1 அல்லது 2 மண்டலம் கொடுக்க, இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் புண்கள், கட்டிகள் தீராத நாட்பட்ட வயிற்று வலி, நவ மூலம், மூல அரிப்பு மலத்துடன் இரத்தம் வருதல் தீரும். உப்பை ஒரு குண்டுமணி அளவு வெண்ணெய் நெய்யில் 1 அல்லது 2 மண்டலம் கொடுக்க சூதக சிக்கல், சூதக வலி தீரும்., ஜாதிக்காய் சூரணத்துடன் ஒரு குண்டுமணி பிரண்டை உப்பு சேர்த்து நெய்யில் கொடுக்க நரம்புத்தளர்ச்சி, பலவீனம், தாது இழப்பு தீரும். பிரண்டை வேரை உலர்த்தி பொடித்து ஒரு கிராம் அளவாகக் காலை, மாலை கொடுத்துவர முறிந்த எலும்புகள் ஒன்று கூடும். ஓரிரு துளி பிரண்டை சாற்றை காதில் விட்டு வர சீழ்பிடித்தல் தீரும் நாசியில் விட்டு வர விஷம் தீரும்.

நன்றி : ASN சாமி அங்கக ஒருங்கிணைந்த விவசாய பண்ணை மற்றும் மூலிகை பண்ணை, ஆதனூர், திருவண்ணாமலை மாவட்டம், 94423 11505.

Spread the love