May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பிரதமர் நுண்ணீர் பாசன திட்டத்திற்கு பயனாளிகள் முன்பதிவு துவங்கியது

சென்னை, ஏப்.28

பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டத்திற்கான பயனாளிகள் முன்பதிவை, தோட்டக்கலை துறையினர் துவக்கியுள்ளனர்.

நாடு முழுவதும், பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டத்தை, மாநில அரசுகளுடன் இணைந்து, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், சிறு, குறு விவசாயிகளின் நிலங்களுக்கு

இலவசமாகவும், மற்ற விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியத்திலும், நுண்ணீர் பாசன கட்டமைப்புகள் அமைத்து தரப்படுகின்றன.

நுண்ணீர் பாசன கட்டமைப்புகள் வாயிலாக, பயிர்களுக்கு தண்ணீர் மட்டுமின்றி உரம், நுண்ணூட்ட சத்துக்களை வழங்குவதால், சாகுபடிக்கான செலவு கணிசமாக குறைகிறது. நடப்பாண்டில்

தோட்டக்கலை துறை வாயிலாக, ரூ.1,000 கோடி மதிப்பில், இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான பயனாளிகள் முன்பதிவு தற்போது துவங்கியுள்ளது.

இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள், தோட்டக்கலை துறையினரை அணுகுவது மட்டுமின்றி, அரசின் உழவன் செயலி வாயிலாகவும், வீட்டில் இருந்தபடியே முன்பதிவு செய்யலாம்

என அறிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love